ஓய்வு பெறுவதற்கான காலப்பகுதியை நெருங்கியுள்ள ஆசிரியர்களுக்கு சலுகை


தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கான கால எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
58ம் 59ம் வயது எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த சலுகை கிடைக்கவுள்ளது.
ஒரே தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேலாக தரம் ஆறுக்கும் பதினொன்றுக்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த ஆசிரியர்களுக்கான இடமாற்றம் இம்மாத இறுதியில் அமுலாகவுள்ளது. இதனால் உரிய பாடசாலைகளில் நீண்டகாலமாக கற்பித்து வரும் ஆசிரியர்களை அவர்களின் விருப்பத்திற்கு அமைய உரிய பாடசாலையில் கற்பிக்க இடமளிக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் தரம் ஆறுக்கும் பதினொறுக்கும் இடைப்பட்ட வகுப்புகளுக்கான ஐயாயிரத்து 500 ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -