தென்இந்நியாவில்... பவள விழாவினைக் கொண்டாடும் காப்பியக்கோ, ஜின்னாஹ் ஷரிபுத்தீன்


எம்.எஸ்.எம்.ஸாகிர்-
லக்கிய உலகில் கவிதை எழுதுவதில் தனக்கென ஒரு தனி இடத்தை வகித்து மரபுக்கவிதைகளை யாப்பதில் வல்லவரான பிரபலமூத்த கவிஞர், காப்பியக்கோ, ஜின்னா ஷரிபுத்தீனின் பவள விழாவினை தென்னிந்தியாவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஏற்பாட்டில் இடம்பெறுகின்ற காப்பியக்கோ, டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் பவளவிழாவில்அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் என்ற காப்பிய நூலும் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
இவ்விழா எதிர்வரும் (17) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, சென்னை, எழும்பூர், 39 மாண்டியத் சாலை, வெஸ்டியன் பார்க்ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகம்மதலி தலைமையில் நடைபெறும்இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே. எம்.எம். காதர் மொஹிதீன் நூலை வெளியிட்டுவாழ்த்துரையை வழங்குவதோடு, பேராசிரியர், முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் முதற்பிரதியைப் பெற்றுக் கொள்வார்.

காப்பியக்கோ, டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஏற்புரையை வழங்குகிறார்.
சுமார் 25க்கு மேற்பட்ட பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவுக்கு இலங்கையிலிருந்து புரவலர் ஹாஷிம் உமர், சட்டத்தரணிமுஹம்மது ஃபைஸல், சட்டத்தரணி கவிஞர், மர்சூம் மௌலானா, பொறியியலாளர் கவிஞர், நியாஸ் ஏ. ஸமத் ஆகியோர்சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பு பிரதிகளையும் நிகழ்வில் வாழ்த்துரைகளையும் நிகழ்த்துகின்றனர்.

இலங்கை உட்பட சிங்கப்பூர், துபாய், இந்நியா போன்ற நாடுகளிலிருந்தும் பேராசிரியர்கள், புரவலர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள்,இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட்டோரும் விழாவில் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -