இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வெற்றி பெற்ற 120 உறுப்பினர்கள் 26.03.2018 அன்று அதிகாலை 4 மணியளவில் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய மண்டபத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
இதில் கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, குருநாகல், கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 43 சபைகளில் 120 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் செய்வதையும், ஆலய வழிபாடுகளில் ஈடுப்பட்டிருப்பதையும், நிகழ்வில் ஊவா மாகாண, மற்றும் மத்திய மாகாண அமைச்சர்களான செந்தில் தொண்டமான், எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ஏ.பி.சக்திவேல், எஸ்.பிலிப்குமார், பி.மதியுகராஜா, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள், முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான எஸ்.இராஜதுரை உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களையும் இங்கு படங்களில் காணலாம்.