கல்வியில் சிறந்து விளங்குவதற்கு; விளையாட்டு இன்றியமையாதது.

மடுக்குளத்தில் எம்.பி.காதர் 
ல்வி நடவடிக்கைகளோடு இரண்டறக் கலந்துள்ள இணைப்பாடவிதான செயற்பாடுகளில் விளையாட்டும் ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார்.

இன்று வவுனியா மடுக்குளம் நவஜோதி வித்தியாலயத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பொழுதே இக்கருத்துக்களை அவர் தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது கல்வியும் விளையாட்டும் மாணவப் பருவத்தில் இன்றியமையாத இருவேறு செயற்பாடுகளாகும்.

ஆரோக்கியமான உடலின் தான் ஆரோக்கியமான மனம் இருக்கும். என்று முன்னோர்கள் சொன்னதற்கு காரணம் சோம்பல் கொள்ளாமல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு மனவலிமை மனோ சக்தி தேவையாகும்.
அதனை விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலமே இலகுவாகப்பெற்று கல்வியில் சிறந்து விளங்க முடியும் எனவும் குறிப்பிட்டார். 
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதேச கோட்டக் கல்விப்பணிப்பாளர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -