பேஸ்புக் வட்சப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இடையூறுகளுக்கு இன்றைய தினம் தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில் ,
சமூக இணையத்தள இடையூறுகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஆணைக்குவில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.
பேஸ்புக் ,வைபர், வட்சப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஓழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டது. கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -