பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை அவர்கள், நடிகர் கமல் அவர்கள் புதிதாக துவக்கியுள்ள மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியில் இணைந்துவிட்டதாக பகீர் தகவல் வெளியான நிலையில் உண்மை நிலை என்னெவென்று விசாரிக்க துவங்கினோம் நாம்.
மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியினை கமல் துவங்கியவுடன் மேற்கொண்டுவருகிற முதற்பணி அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பதுதான். இணையதளம் வாயிலாகவும் அவரது கட்சிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், தமது மின்னஞ்சலுக்கு நீங்களும் எனது கட்சியில் இணைந்துவிட்டீர்கள் - இன்றிலிருந்து நாமானோம் என கமல் கட்சியிலிருந்து மின்னஞ்சல் வந்ததாக தமிழிசை இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமக்கே இப்படி என்றால் பிறருக்கும் இவ்வாறு மின்னஞ்சல் அனுப்பிய ஆள்சேர்க்கின்றனரா கமல் கட்சியினர் என கேள்வியெழுப்பினார் தமிழிசை. முன்னதாக, மிஸ்டுகால் மூலமாக தங்களது கட்சியில் இலட்சக்கணக்கில் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக பாஜக தலைவர் மக்களவை தேர்தலின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -