””--சில படித்த அரசியல் ஆசை கொண்ட கலாசார உத்தியோகத்தர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், வர்த்தகர்கள் என்று சமுகத்தில் மேல் நிலையில் உள்ள சுய நலவாதிகள் இவ்வாரான கீழ்த்தரமான செயற்பாடுளில் ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறனர்.---”””
கல்குடா முஸ்லிம் அரசியல் வரலாற்றில் பல்வேறு கட்சிகள் தமது சுவடுகளை பதித்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மக்கள் பேரியக்கம் மாத்திரமே தனது சுவடுகளை ஆழமாகவும், அதே நேரம் அகளமாவும் பதித்திருக்கிறது.
சுதந்திரத்திற்கு பிற்பட்டஇலங்கை அரசியல் வரலாற்றில் கல்குடா முஸ்லிம்களின் நீண்ட கால கனவு ஒன்று இருந்ததென்றால் அது தமது
பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தை அலங்கரிக்க வேண்டும் என்பதே! அந்தக்கனவை மெய்ப்படுத்துவதற்குத் தேவைப்பட்ட ஒரு மக்கள் இயக்கம்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியாகும்.மறைந்த முகைதீன் அப்துல் காதர் அந்த வரலாற்றுக் கனவுக்கு நாயகனானார். நீண்ட காலம் அரசியல் செயற்பாடுகளில் நிலைத்து நின்று சேவையாற்ற அவரால் முடியாமல் மரணித்ததன் பிற்பாடு அந்த இடத்தை நிரப்பியவர் தற்போதைய பிரதி அமைச்சர் கௌரவ அமீர் அலி அவர்கள்.
பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் பாராளுமன்ற அறிமுகத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேவைப்பட்டதும் இந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிதான். அந்தக் கட்சியில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அமீர் அலி அவர்கள் அடுத்த கணமே கட்சிக்கும், தலைமைக்கும், தமக்கு வாக்களித்த மக்களுக்கும் துரோகமிழைத்துச் சென்ற வரலாறு யாவரும் அறிந்ததே!
இவ்வாறு கல்குடா முஸ்லிம் அரசியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த கட்சிக்கும் இங்குள்ள மக்களுக்கும் இரத்தமும்,சதையும் போன்ற நெருக்கமிருக்கிறது.
இந்த நெருக்கத்தை பயனுள்ள நெருக்கமாக மாற்றி மக்களுக்கு பிரயோசனங்களைப் பெற்றுக் கொடுப்பது கட்சி அமைப்பாளர்களின் தலையாய கடமையாக இருந்தும் கடந்த காலங்களில் எந்த அமைப்பாளர்களும் தங்களது கடமையை அறிந்து செயற்படாமல் ஏனோ தானோ என்று இருந்து கொண்டு கட்சியை சுயநலத்திற்காகப் பயன்படுத்தி விட்டு இடை நடுவில் விலகிச் சென்றவர்கள்தான் அதிகம்.
இவ்வாறு இடை நடுவில் விலகிச் சென்ற அமைப்பாளர்களால் இக்கட்டான சூழ்நிலையில் கட்சி தவித்துக் கொண்டிருந்த போதுதான் தற்போதைய புதிய அமைப்பாளர் கணக்கறிஞர் ரியாழ் அவர்கள் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப்பட்ட காலத்தில் அப்போது கட்சியின் அமைப்பாளராக இருந்தவர்களும்,உயர்பீட உறுப்பினர்களாக இருந்தவர்களும்,கட்சியின் செயற்பாட்டாளர்களும், ஏன் முன்னனிப் போராளிகளும் கட்சியை கைவிட்டு பிரதி அமைச்சர் அமீர் அலியிடம் தஞ்சமடைந்திருந்தனர். அதே வேளை கட்சியைத் தாங்கிப்பிடிப்பதற்கும் அப்போது யாரும் முன்வரவில்லை.
இவ்வாறு பாரிய சவால்களுக்கு மத்தியில்தான் புதிய அமைப்பாளர் ரியால் அவர்கள் கட்சியின் சுமைகளைத் தாங்கிப்பிடித்தார். இந்த சந்தர்ப்பத்தில் கடந்த பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் கல்குடாவுக்கான கட்சி வேட்பாளராகவும் ரியால் அவர்கள் களமிறக்கப்படார். சுமார் 9000 வாக்குளைப் பெற்றுக் கொடுத்து மாவட்டத்தில் தேசிய கட்சிகளைத் பின்தள்ளி பாரிய வெற்றியை கட்சி பெற இந்த வாக்குகள் தாக்கம் செலுத்தியது. தான் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ஏனைய அமைப்பாளர்களைப் போல் கட்சியை விட்டு ஒழிந்து ஓடப் போவதில்லை என்று மக்கள் முன் வாக்குறுதி அளித்ததோடு தனக்கு வாக்களித்த மக்களுக்கு என்றும் கட்சியைப் பயன்படுத்தி முன்னேற்றகரமான அபிவிருத்தி திட்டங்களை செய்து தருவேன் என்றும் உறுதியளித்து செயற்பட்டார்.
ரியால் அவர்களின் செயற்பாடுகளும்,அவரது நடவடிக்கைகளும், அவரது பாரிய சமுக நலத்திட்டங்களும் கல்குடா முஸ்லிம்களை வெகுவாக நாளுக்கு நாள் கவரத் தொடங்கியது. இந்த கவர்ச்சியினால் உந்தப்பட்டவர்கள் ரியால் அவர்களோடு ஒன்றினைந்து அரசியல் பயணங்களை மேற்கொள்ளத் தயாரானார்கள். அந்தப் பயணங்களின் பிரதிபலிப்பை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் முடிவுகளில் அவதானிக்க முடிகிறது. 12வருட கால அரசியல் முதிர்ச்சியடைந்த பிரதி அமைச்சர் அமீர் அலியின் கோட்டையை தகர்க்க ரியால் அவர்களின் நடவடிக்கை மாத்திரமே காரணமாக அமைந்ததே தவிர எந்த அதிகாரங்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இவ்வாறு நாளுக்கு நாள் கட்சியின் வளர்ச்சி வேகம் கல்குடாவில் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்ற வேளையில்தான் பிரதேச சபைத் தேர்தலில் ஓட்டமாவடி பிரதேச சபையில் கட்சியில் வெற்றி பெற்ற சில உறுப்பினர்களுக்கு தவிசாளர் ஆசை பிறந்தது. இந்த ஆசையில் உள்ள இரு உறுப்பினர்களை வைத்து சில வஞ்சக நெஞ்சம் கொண்ட பிறவிகள் குட்டையைக் குழப்பி விட்டு அந்தக் குழப்பத்தை ரியால் அவர்கள் மீது சாட்டிவிடப்பார்க்கின்றனர்.இந்தச்சதி ரியாலின் மீது கொண்ட காழ்ப்புணர்வின் வெளிப்பாடு. அவரது இடத்தை சூழ்ச்சி செய்து எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற அவா.
கட்சி கவனிப்பாரற்றுக் கிடந்த போது வீட்டு மூலைகளிலும்,
வேலி ஓரங்களிலும் ஒழிந்து கொண்டவர்கள்தான் அவர்கள். கட்சியை தாங்கிப்பிடிப்பதற்கு அப்போது அழைத்த போது தனக்கு ஏன் வீண் வம்பு என்று நாக் கூசாமல் சொன்னவர்கள். தனது பொருளாதாரத்தில் மக்களுக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் கிஞ்சிற்றும் உதவாத இந்த உதவாகக்கரைகளுக்கு இப்போது ரியாழ் அவர்களின் வளர்ச்சி முட்தைப்பதைப் போன்று தைத்துக் கொண்டிருக்கிறது. அது மாத்திரமன்றி எதிர் வரும் மாகாணசபைத் தேர்தலிலே ரியால் களமிறங்கினால் இப்போதைய நிலையில் வெற்றி என்பதை இறைவனைத்தவிர யாராலும் தடுக்க முடியாது போகும். அதே வேளை தங்களது மாகாணசபை கனவும் அப்படியே தவிடு பொடியாகிவிடும். எனவேதான் இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி குட்டையை குழப்பி அதிலே மீனைப்பிடிக்க பார்க்கின்றனர்.
சில படித்த அரசியல் ஆசை கொண்ட கலாசார உத்தியோகத்தர்கள்,திட்டமிடல் பணிப்பாளர்கள், பதில் நீதவான்கள்,வர்த்தகர்கள் என்று சமுகத்தில் மேல் நிலையில் உள்ள சுய நலவாதிகள் இவ்வாரான கீழ்த்தரமான செயற்பாடுளில் ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருக்கிறனர்.
வெறுமனே ஒப்பனை போடுகின்ற {makeup} இந்தக் கூட்டம் தேர்தல் காலங்களில் உறங்கும் பங்காளர்களாக இருந்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்றதும் சந்தித்கி சந்தி நின்று கொண்டு ரியால் அவர்களை வீழ்த்த வியுகங்கள் வகுத்துஅவர்களையே அவர்கள் தாழ்த்திக் கொள்கின்றனர். ரியால் என்பவர் மக்கள் சக்தி மிக்க ஒருவர். மக்கள் சக்தியை தாமும் பெற வேண்டுமென்றால் பின் கதவு சாத்தியப்படாது. முடிந்தால் முன்னாள் வர முயற்சி செய்யுங்கள்.முக நுாலில் கட்டுரை எழுதி தங்களது காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தி சமுகத்தில் இன்னுமின்னும் தாழ்ந்து போகும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்களது முகங்களில் தாங்களே கரியை பூசிக் கொள்ளாதீர்!