சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக நௌஷாட்...

ம்மாந்துறை பிரதேச சபையை முதன்முறையாக "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்" கைப்பற்றியுள்ளது. இன்று காலை (27/03/2018) சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.நௌசாட், பிரதித் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோருக்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஆளுங்கட்சியான மக்கள் காங்கிரஸ் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுக்கு ஆதரவாக 12 வாக்குகள் பெறப்பட்டதுடன், கூட்டுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த 08 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் #றிஷாட்#பதியுதீனுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவை அடுத்தே, சம்மாந்துறை பிதேச சபையில் இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- ஊடகப் பிரிவு -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -