கண்டி, தெல்தெனியாவில் இனவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து, வீடிழந்து, சொத்துக்கள் இழந்து, பள்ளிவாசல்ளை இழந்து தவிக்கும் நமது உறவுகளுக்காக ஏறாவூரில் நிவாரண பணியை ஏறாவூர் சம்மேளனமும்
PSP நண்பர்கள் வட்டாரமும் இளைஞர்களுடன் ஆதரவோடு செய்து வருகின்றனர்
இதனை முகப்புத்தகத்தில் நஸீர் ஹாஜியார் என்பவர்பதிவிட்டதை ஒரு சகோதரி, பார்வையிட்டு தொலைபேசியில்
எனது வீடுவந்து நிவாரணத்தை பெற்று செல்லுங்கள் என்று சொல்லியதுக்கு அமைய தாமதிக்காது அவரது வீடு சென்றுள்ளார்
அந்த சகோதரி விரலில் போட்டிருந்த "தங்க மோதிரத்தை "களட்டி அவரிடம் கொடுத்து, இதைத்தவிர என்னிடம் வேறொன்றுமில்லை என்று சொன்ன அந்த வார்த்தை அந்த ஹாஜியாரின் உள்ளத்தை உருக்கியதாக தெரிவித்தார்
இவ்வாறான உணர்வுகளோடு பல குடும்பங்கள் நிவாரண பொருட்களை கொடுத்துக்கொண்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி ,பொருட்கள் சேகரிப்பு தாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார் .