“மருதமுனை மஜ்லிஸ் கட்டார்“ அமைப்பினர் அனர்த்தங்களுக்கு மாத்திரமல்லாது தொடர்ச்சியாக மருதமுனையின் அபிவிருத்திக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும். இந்த அமைப்பின் தலைவராக பொறியியலாளர் ஏ.எஸ்.எம்.பர்ஸாத் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவர்கள் ஊடாக சுமார் ரூபா 583400.00 கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நிதியோடு மருதமுனை மக்களால் வழங்கப்பட்ட நிதியையும் சேர்த்து சுமார் 28 இலட்சம் ரூபா நிதி சம்மேளனத்தினால் சேகரிக்கப்ப்டுள்ளது.
இந்த நிதி வீணாக்கப்படாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் உறுதியாக இருக்கின்றது. அண்மையில் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு நேரடியாக கள ஆய்வினை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை கேட்டறிந்துள்ளோம். பூர்த்தி செய்யக்கூடிய வேலைத்திட்டங்களை இந்த நிதி மூலம் செய்து முடிக்க வேண்டும். திரும்பத்திரும்ப பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் உதவிகேட்டு வருபவர்களாக இல்லாமல் தேவைகளை முடித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைப்பதுவே எமது நோக்கம் எனத் தெரிவித்தார்.
“மருதமுனை மஜ்லிஸ் கட்டார்“ அமைப்பின் மருதமுனை செயற்பாட்டுக் குழுவின் செயலாளர் ஏ.எம்.அஸ்வர் மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்-செய்க் எம்.ஐ.குசைனுத்தீன் (றியாழி) யிடம் காசேலையை கையளித்தார் இதில் பள்ளிவாசல் தலைவர்கள் உட்பட சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.