ஔடத மாத்திரிகைகள் உணவுடன் கலப்பதன் மூலம் மலட்டுத் தன்மையை அல்லது கருவளத்தைத் தடுக்க முடியாது , இக் கதை ஒரு சில விசமிகளால் கட்டுக்கதைகளாக்கப்பட்டு சமுக ஊடகங்களினால் பரப்பட்டதொரு கற்பனைக் கதையாகும்.. உலகில் எந்தவொரு நாட்டிலும் உணவுகளில் கர்ப்ப மாத்திரிகளை அரைத்து உண்னுவதன் மூலம் ஆண் அல்லது பெண்களின் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம் என்ற சுகாதார கண்டுபிடிப்பு முதன் முதலாக இலங்கையிலேயே கேள்வியுற்றோம். என இலங்கை சுகாதார சேவையில் ஈடுப்ட்டுள்ள 134 மூத்த வைத்தியா்கள் இணைந்து தெரவித்துள்ளதாக வைத்தியா் உபுல் திசாநாயக்க தெரிவித்தாா். -
மேற்படி விடயமாக ஊடகவியலாளா் மாநாடொன்று இன்று(15) பொரளையில் உள்ள இலங்கை மருத்துவா் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. இம் மாநட்டிற்கு மருத்துவ சங்கத்தினால் மருத்துவதுறை பேராசிரியா்கள் வைத்தியகலாநிதிகள் சில மூத்த வைத்தியா்கள் கலந்து கொண்டிருந்தனா்.
வைத்தியா் உபுல் திசாநாய்கக மேலும் கருத்து தெரிவிக்கையில் -
உணவுடன் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரிகைளைக் கலப்பதன் மூலம் கருவளத்தைத் தடுக்க முடியும் என்ற தவறான அச்சம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளமையால் அது பற்றிய உண்மை நிலையை தெளிவு படுத்துவது எமது கடமையாகும். இது விஞ்ஞானரீதியில் எதுவிதமான அடிப்படையும் இல்லாத பொய்யான கூற்று என்பதை நாம் பொறுப்புடன் கூறுகின்றோம். ஔடத மாத்திரிகைகள்,துாள் அல்லது தடுப்புசிகள் மூலம் ஒரு மனித குழுமத்தையோ அல்லது இனத்தையோ மலட்டுத்தன்மையாக்க முடியும். என்பது நடைமுறையில் எவ்வகையிலும் செய்ய முடியாதது என்பதை வலியுறுத்திக் கூறுகின்றோம்
ஆனால் ஓ்ர் ஆனுக்குத் தற்காலிகமாக மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய குடும்பக் கட்டுபாடுக்குரிய விழுங்கும் மாத்திரையொன்று உலகில் எவ்விடத்திலும் கிடையாது .
ஆண் பெண் இரு பாலருக்கும் ஒரு குழந்தையைக் கருத்தரிககச் செய்வதற்குத் தாக்கஞ் செலுத்தும் பல காரணிகள் உண்டு. ஓர் ஆணின் கருவளத்திற்கு அவருடைய விந்துக்களின் கட்டமைப்பும் செயற்பாடும் எண்ணிக்கையில் சிறப்பான முறையில் அவை விந்துத் திரவத்தில் இருப்பது அத்தியாவசியமாகும்.
இவற்றில் ஒரளவேனும் குறைபாடு ஏற்படும்போது ஓர் ஆண் மூலம் ஒரு பெண்ணை கருத்தரிக்கச் செய்யும் ஆற்றல் குறையும் இந் நிலைமை கருவளக் குறைவு என அடையாளப்படுத்த்பபடும். இது மிக அபுர்வமாக கருவளமின்மை அல்லது மலட்டுத் தன்மை வரை வளா்ச்சியடைக்கக் கூடும். இத்தகைய விடயங்கள் ஒரு பெண்ணின் கருவளம் மீதும் தாக்கம் செலுத்துகின்றது. தற்போது பாவனையில் உள்ள சகலவிதமான குடும்பக்கட்டுப்பாட்டு மாத்திரைகளும் தடுப்பூசிகளும் பெண்களின் பாவனைக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டது. இவற்றின் மூலம் தற்காலிகமாக கருத்தரிக்கும் ஆற்றல் தடுக்கப்படுகின்றது.
சில நோய்களுக்கு நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படும் ஓளடதங்கள் காரணமாக கருவளம் பாதிக்ககூடிய சாத்தியம் உண்டு ஔடதங்கள் காரணமாக ஏற்படக் கூடிய கருளப்பாதிப்பு மேற்படி ஔடத்தை நிறுத்தியுடன் இயல்பு நிலைக்குத் திரும்பும் மேற்படி ஔடத்தைப் பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட மேல் நாட்டு மருத்துவரின் மருந்துச் சீட்டு சமா்ப்பிக்கபட வேண்டியது அத்தியவசியமாகும். உணவுகளுடன் ஆண்களுக்கு மலட்டுத்தண்மை மாத்திரை கலந்து கொடுத்தால் அவருக்கு பிள்ளைப்பேறு கிடைக்காது என்பது ஒரு கட்டுக் கதையாகும். இது விஞ்ஞான ரீதியில் எவ்வித சான்றிதழும் ்இல்லை என வைத்திய உபுல் திசாநாய்க்க தெரிவித்தாா்.