திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட கொட்டகலை பத்தனை பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் அலுவலகம் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி ஒன்றில் வருகை தந்த இனந்தெரியாதவர்களால் குறித்த காரியாலம் கிரிகட் பொல்லுகள் தாக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதல் காரணமாக அலுவலக கணணி, நாட்காலிகள் உடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
தாக்குதல் மேற்கொள்ளும் போது அலுவலகத்தில் இரண்டு பணியாளர்கள் கடமையில் இருந்துள்ளதாகவும், இவர்கள் கூச்சலிட்டதன் காரணமாக தாக்குதலை மேற்கொண்டவர்கள் ஓடிவிட்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.