மருதமுனை மண்ணுக்கு மற்றுமொரு பெருமை: ஐந்து பேர்கள் சமூகப்பணி பட்டதாரிகளாக பட்டம் பெற்றார்கள்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
மூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சின் கீழும் ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்துடனும் இணைந்து காணப்படும் ராஜகிரியவில் அமையப் பெற்றிருக்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை(29) கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் 2013/2017 ஆண்டுக்கான சமூகப் பணித் துறையில் நான்கு வருட கால பாடநெறிகளை பூர்த்தி செய்த 86 மாணவர்களும் 07 சமூகப் பணி முதுமாணி பட்டங்களையும் மொத்தமாக 93 பேர்கள் பட்டம் பெற்றார்கள்.

இதில் மருதமுனை மண்ணுக்கு ஐந்து பேர்கள் சமூகப்பணி பட்டங்களைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர் ஜமால்டீன் முஹம்மட் தஜ்மீல் (Psy Sw),மொஹம்மட் குசைன் வஸீம் குசைன்(Psy Sw),மொஹம்மட் மஹ்ரூப் மொஹம்மட் நஹ்பீஸ்(HRM),மொஹம்மட் நிஸார் பாத்திமா நதா(Psy Sw),அப்துல் றசீட் சுகா(Psy Sw) ஆகியோர்களே இவ்வாறு சமூகப் பணித் துறையில் பட்டங்களைப் பெற்று தனது மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப் பட்டமளிப்பு வைபவத்துக்கு சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அமைச்சின் செயலாளர் திருமதி சிரானி வீரகோன்,பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பி.எஸ்.எம்.குணரட்ண உட்பட தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ரிட்லி ஜயசிங்க ,விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -