அக்கரபத்தனை பிரதேசபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எச்.எம்.யு.பி.ஹேரத் தலைமையில் 27.03.2018 அன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
இதில் திறந்த முறையில் வாக்கெடுப்புக்களை நடத்த முடிவு செய்யப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக தலைவர் பதவிக்கு சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் அவர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக வேலு சிவானந்தன் அவர்களும் போட்டியிட்டனர்.
இதில் எட்டு வாக்குகளை பெற்று சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிராஸ் சார்பாக போட்டியிட்ட சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் தெரிவு செய்யப்பட்டார்.
எதிராக போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் வேலு சிவானந்தன் 06 வாக்குகளே பெற்றுக்கொண்டார். இதில் கடிகாரம் சின்னத்தில் சுயட்சையாக போட்டியிட்டு போனஸ் ஆசனத்தில் தெரிவான ருவான் பத்திரன எவருக்கும் வாக்களிக்கவில்லை.
இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவு செய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சுப்பிரமணியம் சுதாகர் அவர்களும் பொதுஜன பெரமுனவில் ஜயலத் விஜயதுங்க அவர்களும் போட்டியிட்டனர்.
இதில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட ஜயலத் விஜயதுங்க 08 வாக்குகளை பெற்று உபதலைவராக தெரிவானர். இவருக்கு எதிராக போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் சுதாகர் அவர்கள் 06 வாக்குகள் மாத்திரமே பெற முடிந்ததுடன் இதற்கும் சுயேட்சையில் போட்டியிட்டு தெரிவானவர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.