இன்று முதல் ஒரு மாதத்திற்குள் உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க முடியும். கடந்த மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளுக்கும்இ சுயேட்சைக் குழுக்களுக்கும் ஆட்சி அமைக்கும் வல்லமை காணப்படுகிறது. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட அதிகாரத்தை தாக்கவைக்க தவறிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பும் நடத்தப்படவிருக்கிறது. உள்ளுராட்சி மன்ற ஆணையாளர்களுக்கு இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் 340 உள்ளுராட்சி மன்றங்களில் 160 உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.