கடந்த சனிக்கிழமை மாலை - மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட மட்ட ஆண் கட்டழகன் போட்டியில் பங்குபற்றிய ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மத் உஸைத் இரண்டாம் இடத்தை பெற்று தனது முயற்சிக்கான அறுவடையை பெற்றுள்ளார் -
ஏறாவூர் பெண் பாடசாலை வீதியில் வசிக்கும் உஸைத் தனது அயராத முயற்சியின் பயனாக இன்றைய போட்டியில் பல்வேறு படித்தரங்களை தாண்டி - பலத்த போட்டிக்கு மத்தியில் குறித்த இலக்கினை அடைந்துள்ளார் -
இடம் பெற்ற கட்டழகன் போட்டியில் மட்டக்களப்பை சேர்ந்த டியோன் என்பவர் முதலாம் இடத்தை பெற்றதுடன் , ஏறாவூர் உஸைத் இரண்டாம் இடத்தையும் காத்தான்குடி பாலமுனை பகுதியை சேர்ந்த அலாவுதீன் சித்தார் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர் -
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.