சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின விழா 17.03.2018 அன்று மஸ்கெலியா நகர மைதானத்தில் நடைபெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு தலைவியும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான திருமதி. சரஸ்வதி சிவகுரு தலைமையில் 'பெண்ணை மதிப்போம். பெண் கல்விக்கு வழிவகுப்போம். மாதர் அரசியலை மலையகத்தில் வளர்த்தெடுப்போம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, எம்.ராம், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இருந்து பிரதான மேடை வரை மஸ்கெலியா பிரதேசத்தை உள்ளடக்கிய மகளிர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்களின் பேரணி ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.