இதற்காக இராணுவத்தினர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரின் அற்ப நோக்கங்களுக்காக நாட்டின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலிகொடுக்க அரசாங்கம் தயாரில்லை எனவும் இவ்வாறான அற்ப நோக்கங்களுக்காக செயற்படுபவர்களுக்கு எதிராக உயர்ந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்த இராணுவம் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவத்துடன் பல்வேறு பெயர்களில் தோன்றிய இனவாத இயக்கங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் வைபர், வட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக திட்டமிட்ட வகையில் செயற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் தேவையான உயர்ந்த பட்ச அதிகாரத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதாகவும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.