இந்திய அரசாங்கம் வழங்கும் பத்தாயிரம் வீட்டு திட்டத்திற்கு அடுத்த மாதம் ஒப்பந்தம் செய்யப்படும் – திகாம்பரம் தெரிவிப்பு


க.கிஷாந்தன்-
லையக பெருந்தோட்ட பகுதிகளில் தனி வீடு திட்டத்தினை அமைச்சர் என்ற ரீதியில் நானே முன்னெடுப்பேன். இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள பத்தாயிரம் வீட்டு திட்டத்திற்கு அடுத்த மாதம் அளவில் ஒப்பந்தம் செய்யவுள்ளேன் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின விழா 17.03.2018 அன்று மஸ்கெலியா நகர மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புலி வருகிறது புலி வருகிறது என கூறிக்கொண்டு சிலர் இன்று அமைச்சர் பதவி கிடைக்கும் நாளை கிடைக்கும் என மக்களிடம் பொய் கூறி வருகின்றனர். திகாம்பரத்தின் அமைச்சு பதவியை பிடுங்குவதாக பொய் கூறுகின்றனர்.

அமைச்சர் பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நான் மக்களுக்காக சேவை செய்பவன்.

மஸ்கெலியா நகர மக்கள் மற்றும் தோட்ட பகுதி மக்க்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் மீது அக்கறை கொண்டு இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அதிகபடியான வாக்குகளை அளித்து எம்மை வெற்றியடைய செய்தார்கள்.

அந்தவகையில் நுவரெலியா மாவட்ட மக்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வழங்கி இருந்தார்கள் என்பதை உலகம் பூராவும் மார்ச் 8ம் திகதி கொண்டாடும் மகளிர் தின விழாவை மஸ்கெலியா நகரை சிறப்பித்து இதை கூறுவதில் பெருமையடைகின்றேன்.

இந்த நகரத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டங்களை தேர்தல் காலத்தில் கூறியது போல் நான் முன்னெடுப்பேன். அதே நேரத்தில் தேர்தல் முடிந்த பின் மஸ்கெலியா நகரத்திற்கு வருகை தந்துள்ளேன். இதற்கு முன்னால் இங்கு வருகை தந்த சிலர் இந் நகரத்தின் பொலிஸ் நிலைய அதிகாரியை இடமாற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பொலிஸ் அதிகாரிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை அவர்களை இடமாற்றம் செய்ய முடியாது. ஆகையால் அவர்கள் சொல்வது போல் எவரையும் இடமாற்றம் செய்ய முடியாது என்பதை உருக்கமாக தெரிவித்தார்.

தேர்தல் காலப்பகுதியில் தொழிலாளர்களுடைய ஊழியர் சேமலாப நிதி பணத்தை ஐக்கிய தேசிய கட்சியினர் ஏப்பம்விட்டதாக சொல்லி வாக்குகளை பெற்றுக்கொண்டார்கள். மக்களும் ஏமாந்து வாக்குகளை அளித்தார்கள். உங்களுடைய சேமலாப நிதியை நீங்கள் மத்திய வங்கிக்கு சென்று பரிசீலிக்க முடியும்.

அத்தோடு நடைபெற்ற தேர்தலில் பொய்களுக்கு மேல் பொய் கூறி மதுபானங்களை வழங்கி வாக்குகளை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அதன் சேவையை பாராட்டி இலட்சத்திற்கு மேல் வாக்குகள் அளித்தமை எமக்கு பெருமையாக இருக்கின்றது.

எனவே பெண்கள் மலைகளுக்கு சென்று அணைவருக்கும் சொல்லுங்கள் ஊழியர் சேமலாப நிதி பணம் சூறையாடப்படவில்லை என்று என தெரிவித்த இவர் எதிர்வரும் காலத்தில் மாகாண சபை தேர்தல் வரவேற்கின்றது. அதற்கு ஒரு பொய்யை கூற சிலர் தயாராக இருப்பார்கள். இதையும் நம்பி ஏமாந்து விட வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -