இந்த நிகழ்ச்சி எதிர்வரும் 28ம் திகதி முதல் ஏப்ரல் 1ம் திகதி வரை நிக்கவரட்டிய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறும். 'சிறப்பான எதிர்காலம் ஆரம்பம்' என்பது இவ்வாண்டுக்குரிய தொனிப்பொருளாகும். இதனை செயற்றிட்ட முகாமைத்துவ இளைஞர் அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் சங்க சம்மேளனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
இளைஞர் முகாமின் நிறைவு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்த இளைஞர் முகாமில் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழாயிரம் இளைஞர் யுவதிகள் பங்கேற்பார்கள். சகல இனங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகளும் கலந்து கொள்வதால், இதற்கு தேசிய நல்லிணக்க யொவுன்-புர என்று பெயரிடப்பட்டதாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் எரந்த வெலிஅங்கே தெரிவித்தார்.