கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் காரைதீவுப்பிரதேசசபைக்கு சுயேச்சை அணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் இருவரும் (24) சனிக்கிழமை பொதுமக்கள்முன் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
காரைதீவு விபுலானந்த மணிமண்டபத்தில் இச்சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு சுயேச்சைக்குழுத்தலைவர் எஸ்.நந்தகுமார் நடைபெறறது.
பொதுமக்களின் வேண்டுகோளின்பேரில் மகாசபையின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட சுயேச்சைஅணி கடந்ததேர்தலில் 2மாதகாலத்துள் 1985வாக்குகளைப்பெற்று 2ஆசனங்களைப்பெற்றுள்ளது.
சுயேச்சைஅணியில் போட்டியிட்ட அணியின் மூத்தபிரஜை ஆ.பூபாலரெத்தினம் மற்றும் விஸ்ணுஆலய தலைவர் இராசையா மோகன் ஆகியோர் முதலாம்வருட உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
கிழக்குமாகாண நீர்ப்பாசனத்திணைக்கள மாகாணப் பணிப்பாளரும் சட்டதத்தரணியுமாகிய எந்திரி சி.திலகராஜன் உதவிக்கல்விப்பணிப்பாளரும் சமாதானநீதிவானுமாகிய வி.ரி.சகாதேவராஜா மற்றும் சுயேச்சைக்குழுத்தலைவர் எஸ்.நந்தகுமார் மகாசபைத்தலைவர் கே.தட்சணாமூர்த்தி செயலாளர் இ.நடேசமூர்த்தி பொருளாளர் வி.விஜயசாந்தன் ஆகியோர் முன்னிலையில் இச்சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபற்றது.
முதல்வருடம் பதவியேற்கும் இரு உறுப்பினர்கள் உட்பட 4வருடங்களும் பதவியேற்கும் 8உறுப்பினர்களும் முறைப்படி சத்தியப்பிரமாணம்; செய்தனர்.
அத்துடன் சுழற்சிமுறையில் பதவியைவகிப்போருக்கான உறுதியுரை இராஜினாமாப் படிவங்களும் அங்கு கைச்சாத்திடப்பட்டது.
நிகழ்விற்கு பொதுமக்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். வாக்களித்த பொதுமக்கள்முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது வரலாற்றுநிகழ்வாகும் என தலைவர் ச.நந்தகுமார் தெரிவித்தார்.
இதேவேளை சுயேச்சை அணியில் விருப்பம் தெரிவித்த எண்மருக்கு பிரதிவருடமும் இருஉறுப்பினர் வீதம் உறுப்பினர்பதவி சுழற்சிமுறையில்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.அது பகிரங்கமாக வாசித்தளிக்கப்பட்டது.
குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் உறுப்பினராக வரவிரும்பாத மகளிருக்கான ஊக்குவிப்புத்திட்டம் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேசசபையின் ஆட்சியமைப்பது தொடர்பாக முதற்கட்டமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கும் சுயேச்சை அணியிருக்கும் இடையே சந்திப்பொன்று மட்டக்களப்பில் அண்மையில் இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே. அடுத்தசந்திப்பு நாளை இடம்பெறலாமென அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த இருஅணியினரும் மேலுமோரு அணியுமிணைந்து ஆட்சியமைக்கவுள்தாகத் தெரிகிறது.