நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.அக்மல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு JAT PAINTS நிறுவனத்தின் விற்பனை மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தென் ஆசிய பிராந்திய பணிப்பாளர் வசந்த குணரத்னவின் பங்குபற்றுதலுடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் இலங்கை லக்சல நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலினால் திறந்துவைத்ததுடன் ஆரம்பமானது.
JAT PAINTS நிறுவனத்தின் அனைத்து உற்பத்திகளையும் கிழக்கின் நாலாபுறத்திலும் உள்ள மக்களதும் காலடிக்குச் கொண்டு சென்று அந்தமக்களின் கலர் கனவுகளை உண்மைப்பிக்கும் விதத்தில் உற்பத்திகளை மட்டுமல்லாது உற்பத்திகளை பாவிக்கும் தொழில்நுட்பங்களையும் முழுவீச்சில் வழங்கும் நோக்குடனும் EASTERN PAINTS INDUSTRIES நிறுவனம் தனது பணிகளை முன்னெடுக்கவுள்ள அதேவேளை நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான MARBALAC FOR A SUPERIOR FINISH உற்பத்திகளையும் சந்தைக்கு விடவுள்ளது.
EASTERN PAINTS INDUSTRIES நிறுவனம் JAT PAINTS நிறுவனத்தின் உற்பத்திகளை கிழக்கு மாகாணத்துக்கு விற்பனை செய்யும் ஒரேயொரு முகவராகவும் செயற்படவுள்ள அதேவேளை நிறுவனத்தின் கிழக்குப்பிராந்திய விற்பனை முகாமையாளராக முகம்மட் யூனூஸ் என்பவரை நியமித்துள்ளது.
EASTERN PAINTS INDUSTRIES நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான பொறியியலாளர் எஸ்.எம்.சித்தீகின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்தியத்திலுள்ள பொறியியலாளர்கள் கல்வியலாளர்கள் கலர் பூச்சுடன் சம்மந்தப்பட்டவர்கள் பாவனையாளர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.