நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பினால் ,பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்று வார இறுதியில் நடாத்தப்பட்டது.இச்சுற்றுப்போட்டியில் மொத்தமாக 19 அணிகள் பங்குபற்றின .சனிக்கிழமை 14 ஆம் திகதி ஆரம்பமான இந்தச்சுற்றுப்போட்டிகளின் இறுதி நிகழ்வு நேற்று 15 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு அல் அஸ்ரக் தேசிய பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்றது.
சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டிக்கு 2010 ஆண்டினைச்சேர்ந்த அணியும் 2004 ஆண்டினைச்சேர்ந்த அணியும் தெரிவாகின ,நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற 2010 அணியின் தலைவர் J.M.இன்பாஸ் களத்தடுப்பினை தெரிவுசெய்ததனை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு அணியினர் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.ஐந்து ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சிலே 2010 அணியின் சார்பில் ஹாரூன் அம்ஜத் அவர்கள் நான்காவது ஓவரில் நான்கு ஓட்டங்களை மட்டும் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2010 அணியினர் தமது திறமையினை அபாரமாக வெளிக்காட்டினர். 3.4 ஓவர்கள் முடிவில் வெற்றிபெறுவதற்கு தேவையான 49 ஓட்டங்களை 3.4 விரைவாக குவித்தனர்.
இறுதிப்போட்டிகள் நடைபெற்றதினம் சிரேஸ்ட வீரர்களுக்கான கண்காட்சி கிரிக்கட் போட்டி ஒன்றும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது ,அப்போட்டியில் TLA வாஹிட்,பொறியியலாளர் புகாரி அகமது ,நீதிபதி ரியால் ,இருதய நோய்கள் விசேட நிபுணர் டாக்டர் அல்ஹாபில் நௌசாத் ,ஹபீப் வங்கி முகாமையாளர் அன்வர்தீன்,கைத்தொழில் அபிவிருத்தி சபையின் நிதிப்பணிப்பாளர் ஜாஹிட் ஹசன் அவர்கள் உட்பட முன்னாள் கிரிக்கட் பிரபலங்கள் பலரும் விளையாடினர்.
இந்நிகழ்ச்சித்தொடரில் பழைய மாணவர்களின் பங்குகுபற்றுதலுடனான காலைக்கூட்டம் , ஊர்வலம்,சித்திர மற்றும் புகைப்படக்கண்காட்சி போன்ற முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.வெள்ளியன்று நடைபெற்ற காலைக்கூட்டத்தில் சிறுவர் வைத்திய விசேட நிபுணர் டாக்டர் AB அர்சாத் அவர்கள் அறிவுக்களஞ்சியம் ஒன்றினை ஏற்பாடுசெய்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.அறிவுக்களஞ்சியத்தில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடைகூறிய பழைய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
வெளிநாடுகளிலும் ,வெளியூர்களிலும் கடமையாற்றும் அதிகளவிலான மாணவர்கள் தமது விடுமுறைகளை இம்முறை தியாகம்செய்திருந்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.கட்டாரில் இருந்து வந்திருந்த அர்சாத் கரீம் இரண்டு நாட்களும் தொடர்ச்சியாக லாவகமான முறையில் ஆங்கில வர்ணனையை செய்திருந்தார்.
இச்சுற்றுபோட்டிகளுக்கு BBB,ஒசாகா லங்கா,செரெஸ் டொபி,UPT CAMPUS,டீமா பிஸ்கட்ஸ்,ஆதம்பாவா அன் சன்ஸ்,ஹேலீஸ் குபோட்டா ,பதூர்கொம் உட்பட இன்னும் ABD வாடகைக்கார் நிறுவனம் உட்பட இன்னும்பல நிறுவனங்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தன.
போட்டிகளின் இறுதியில் பாடசாலை அதிபர் SMM ஜாபீர் அவர்களது தலைமையில் பரிசளிப்பு நடைபெற்றது.
பிரதி வருடமும் பழைய மாணவர்களினூடாக பாடசாலைக்கு பயனுள்ள நிலையான அபிவிருத்திகளினை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பானது இம்முறை ரூபா 3.3 மில்லியன் செலவில் முன்பக்க நுழைவாயிலுடன் கூடிய சுற்றுமதிலினையும் அமைக்க திட்டமிட்டுள்ளது.இதற்கான உதவிகளை சகல பழைய மாணவர்களிடமுமிருந்து பெற்றுக்கொண்டிருக்கின்றது.
.