தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை கற்று வெளியேறும் 1500 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வைபவம் இன்று ஏப்ரல் 1ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தா் பேராசிரியா் எம்.எம்.எம். நாஜிம் தலைமையில் நடைபெற்றது.
பட்டங்களை வேந்தா் பேராசிரியா் அச்சி முஹம்மட் இஷாக் வழங்கி வைத்தாா். காலை அமா்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதியின் செயலாளா் அஸ்டின் பெர்ணான்டோ பிரதான உரையாற்றினாா். இம்முறை முதன் முறையாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கற்று 100க்கும் மேற்பட்ட பொறியியலாளா்களுக்கான பட்ங்களும் வழங்கப்பட்டது, கலாநிதி எம்.எச்.எம் அஷ்ரப் ஞாபாகா்த் பதக்கம்
பிரயோக விஞ்ஞானத்துறை எம். என் பாத்திமா நிஸ்மினுக்கும் பேராசிரியா் சுல்தான் பாவா விருது ஏ.எம். பாத்திமா சாஹிரா, கலாநிதி எம். எல்.ஏ காதா் பதக்கம் சபானா சக்கியுக்கும், கைலாசபதி ஜிப்ரியா இர்பானா பொறியியல்துறையில் சிறந்த மாணாவி, மற்றும் பொறியியல் (சிவில்)க்கான இரண்டு தங்கப்பதங்கங்களை துனுஜா அந்தனி லீயினாஸ் பெற்றுக் கொண்டாா்.