கல்முனை ஸாஹிராவில் கல்விகற்ற கற்றுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் “ஐக்கியமே பாக்கியம்” எனும் தொனிப்பொருளில் 2018-04-14 ஆம் திகதி, ஸாஹிரா முற்றலில் இருந்து பாரிய நடைபவனி ஒன்று அதிபர் எம்.எஸ். முகம்மட் தலைமையில் இடம்பெற்றது.
ஸாஹிராவின் பழைய மாணவர்களில் ஒருவரும் முன்னாள் அதிபருமான சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைத்க்கப்பட்ட குறித்த நடைபவனி, பொல்லடி மற்றும் ரபான் போன்ற கலாச்சார நிகழ்வுகளுடனும் பாடசாலையின் வேண்ட் வாத்தியம் கடட் மற்றும் மாணவர்களின் அணிவகுப்புகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸாஹிராவில் கல்விகற்ற உயர் கல்வியலாளர்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்த்தனர்.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கம்,அபிவிருத்திக்குழு மற்றும் நலன்விரும்பிகள் என பலரதும் அயராத முயச்சியால் இடம்பெற்ற நடைபவனியானது பாடசாலையில் இருந்து ஆரம்பித்து சாய்ந்தமருது பிரதான வீதிவழியாகச் மாளிகைக்காடு எல்லைவரைச் சென்று பின்னர் அங்கிருந்து கல்முனை நகர சுற்றுவட்டம் வரைச் சென்று கல்முனை நகர் வழியாக சுமார் 12 கிலோமீட்டர்கள் பயணம் செய்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
நடைபவனியின் இடையே அண்மையில் இந்தியாவில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுமி அஸிபாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற பதாதைகளையும் ஏந்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.