கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற ஆண் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 21,22/04/2018 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கலாபீட வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
5 வருட விசேட கற்கை நெறிகளை வழங்கும் பாதிஹ் நிறுவனம் முதல் இரண்டு வருடங்களும் அறபு, ஆங்கிலம், சிங்களம் மற்றம் தமிழ் போன்ற மொழிகள் உட்பட திறன்விருத்தி, ஆன்மீகப்பயிற்சி நெறிகளை வழங்குவதோடு குறிப்பாக க.பொ.த. உயர்தர கலை மற்றும் வர்த்தகப்பிரிவுக்கான பரீட்சைக்குத் தயார்படுத்தப்படுவர்.
இறுதி 03 வருடங்களும் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பாடங்கள் போதிக்கப்படுகின்றன. அதே காலப்பகுதியில் அரச, அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் BA, BBA, ACC, CIMA, AAT போன்ற கற்கை நெறிகளுக்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் 0763505752, 0776000606 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பாதிஹ் கலாபீடத்தின்பணிப்பாளர் கலாநிதி எச். எல். எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.