சாந்த குணநல்மாந்தர்கள் வாழும் கிழக்கு மண்ணிலே லக்ஸ்டோ மீடியா நெற்வேர்க் சிறி லங்கா அமைப்பின் 25 வருட நிறைவை முன்னிட்டு இமயம் கலைக்கூடல் மன்றம் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் கீழக்கு சீமையிலே வெள்ளி விழா நிகழ்வு 21ம் திகதி சனிக்கிழமை கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் இடம்பெறறது.
லக்ஸ்டோ மீடியா நெற்வேர்கின் தலைவர் கலைஞர் செயற்புயல் ஏ.எல். அன்ஸார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா,கிழக்கு மாகாண பிரதி சிரேஷ்ட செயலாளர் (நிர்வாகம்) திருமதி ஜே.ஜே.முரளிதரன் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாராளுமன்ற விவகாரச் செயலாளரும், பிரபல ஊடகவியலாளருமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை நிகழ்வாக பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு இடம்பெற்றது. கோலாட்டம் ரபான் பைத் போன்ற கலாச்சார நிகழ்வுகளுடன் மாலை நிகழ்வு ஆரம்பமானது.
மாலை நிகழ்வில் மர்ஹும்களான கவிஞரும் எழுத்தாளருமான எஸ்.எம்.முஹம்மட் றபீக் மற்றும் கலைஞர் முஸ்தபா அரங்கில், பாலமுனை பாறூக் தலைமையில் கவி அரங்கும், லக்ஸ்டோ மீடியா ஸ்ரீலங்கா. இமயம் கலைக்கூடல் இணைந்து நடத்திய திறமைக்கான தேடல் விருது வழங்கும் நிகழ்வும், நேசம் பத்திரிகை வெளியீடு மற்றும் நற்பிட்டிமுனை வரலாறு புத்தக வெளியீடும் இடம்பெற்றது.
பஷீர் அப்துல் கையும் உள்ளிட்ட பிரபலங்கள் பங்குகொண்டிருந்த நிகழ்வில் வைத்தியர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.