கிழக்கின் மிகப்பிரபலமானதும் பழைமைவாய்ந்ததுமான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் நிர்வாக தெரிவும் 2018-04-30 ஆம் திகதி மாளிகைக்காட்டில் அமைப்பின் தவிசாளர் ஐ.ஹசனலி தலைமையில் ஆரம்பமானது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மறைந்த முன்னாள் தவிசாளர்களான ஹிதாயத்துள்ளா காரியப்பர் மற்றும் சம்சுல் ஆரிபீன் மற்றும் ஏ.எம்.சாலீன் ஆகியோரது மறுமை நல்வாழ்வுக்காக துஆ பிராத்தனை இடம்பெற்றது.
ஒன்றியத்தில் அங்கத்தவர்களாக இருப்பவர்கள் பிரதேசத்தின் முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களாகையால் பிரதேசத்தின் முன்னேற்றத்தில் சிறந்த முன்னெடுப்புக்களை அமைப்பு ரீதியாக மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டது. ஒன்றியத்துக்கு சொந்தமான காணியில் காரியாலய கட்டிடம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
பின்னர் 2018/2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது.
01. தவிசாளர் எம்.வை.எம்.சலீம் (கிழக்குமாகாண உள்ளுராட்சி ஆணையாளர்)
02. நிருவாக பணிப்பாளர் யூ.கே.காலித்தீன் (கல்முனை மாநகரசபை உத்தியோகத்தர்)
03. நிதிப் பணிப்பாளர் ஏ.பி.ஜிப்ரி( பிராந்திய முகாமையாளர் ஜப்லான் ஹோல்ட்ங்)
04. உதவி நிருவாக பணிப்பாளர் எம்.எம்.ஏ.முபாறக் (உப தபால் அதிபர்)
05. உதவி தவிசாளர்கள் ரீ.எம்.றிபாய்(ஆசிரியர்), ஏ.எச்.எம்.நிசார் (பொறியியலாளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை)
06. கணக்குப் பரிசோதகர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் (அதிபர்),ஏ.சி.முகம்மட் (நிந்தவூர் பிரதேச செயலகம்)
07. சட்ட ஆலோசகர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.றஸ்ஸாக் (கல்முனை அமைப்பாளர் ஐக்கிய தேசியக் கட்சி)
08. திட்டமிடல் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எம்.ஐ.எம்.அஜ்வத் (புள்ளி விபர திணைக்களம்), ஏ.எல்.எம்.சலீம் (சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர்), யு.கே.முஷாஜித் (பொறியியலாளர் நீர் வழங்கல் அதிகாரசபை), பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் (சிரேஷ்ட வாகன பரிசோதகர்), எம்.எம்.உதுமாலெப்பை ( சிரேஷ்ட போதனாசிரியர் தொழிற் பயிற்சி அதிகாரசபை), நில அளவையாளர் எம்.ஏ.றபீக் மாநகரசபை உறுப்பினர்),எம்.எம்.ஜுனைடீன் (கொள்கை பரப்புச் செயலாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்),எம்.எம்.ஏ,சலீம் (வேலைத்திட்ட பொறியியலாளர் தென்கிழக்கு பல்கலைக் கழகம்),ஏ.எல்.எம்.சலீம் (தொழிலதிபர்), ஐ.அலியார் (பிரதிப்பணிப்பாளர் சமுர்த்தி), ஏ.எல்.எம்.அன்வர் (தொழிலதிபர்), ஏ.எல்.ஏ.நாபீத் (அதிபர்), எம்.எச்.எம்.நௌபர் (தொழிலதிபர்), எம்.ஐ.ஏ.மஜீத் (பேமிலி சொய்ஸ்)
09. ஊடகப் பணிப்பாளர்கள் எம்.ஐ.எம்.அஸ்ஹர் (ஆசிரியர்), எம்.வை.அமீர்(ஆய்வுகூட உதவியாளர்).