25வீத பெண்கள் இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படவேண்டும்!

இன்றேல் சட்டநடவடிக்கை எடுக்கத்தயங்கமாட்டோம்!
கல்முனைமகளிர் மாநாட்டில் வேள்வித்தலைவி லோகேஸ்வரி சூளுரை!
காரைதீவு நிருபர் சகா-

நாட்டில் இன்னும் 15உள்ளுராட்சிசபைகள் பெண்களுக்கான 25சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவில்லை. இது சட்டப்படி பெண்களின் உரிமையைமீறுகின்;றசெயலாகும். மேலும் தாமதித்தால் நாம் சட்டநடவடிக்கை எடுக்கத்தயங்கமாட்டோம்.

இவ்வாறு கல்முனையில் இடம்பெற்ற மகளிர்தின பாராட்டுவிழாவில் உரையாற்றிய வேள்வி அமைப்பின் தேசியத்தலைவியும் மனிதஅபிவிருத்தித்தாபனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமான திருமதி லோகேஸ்வரி சிவப்பிரகாசம் சூளுரைத்தார்.

மனிதஅபிவிருத்தித்தாபனத்தின் வேள்வி பெண்கள் அமைப்பு சர்வதேசமகளிர்தினவிழாவையொட்டி கல்முனை கிறிஸ்ரா இல்லத்தில் நேற்று(31) பாராட்டுவிழாவையொன்றை அமைப்பின் பிரதித்தலைவி திருமதி றிலீபாபேகம் தலைமையில் நடாத்தியது.

கடந்த உள்ளுராட்சிசபைத்தேர்தலில் வேள்வி அமைப்பின் சார்பாக போட்டியிட்ட 55உறுப்பினர்களுக்கும் அவர்களுள் உள்ளுராட்சிசபை உறுப்பினர்களாக தெரிவான 13மகளிரையும் பாராட்டும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

அங்கு வரவேற்புரையை அமைப்பின்பொருளாளர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் சுபைர் நிகழ்த்த சிறப்புரைகளை இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் மட்டு.மாவட்ட இணைப்பாளர் அசீஸ் தாபனத்தின் வட-கிழக்குமாகாணஇணைப்பாளர் பொன்.ஸ்ரீகாந்த் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா காரைதீவுபிரதேசசபையின் புதிய தவிசாளர் கிரு.ஜெயசிறில் ஆகியோர் உரையாற்றினர்.

அங்கு உரையாற்றிய திருமதி லோகேஸ்வரி மேலும் குறிப்பிட்டதாவது:

இலங்கையின் சனத்தொகையில் 52வீதமானோர் பெண்களாவர். நாட்டில் 56வீதமானோர் வாக்களிக்கத்தகுதியுள்ள பெண்களாவர்.
எனவே வருகின்ற மாகாணசபைத்தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீட 35வீதமாகவும் பாராளுமன்ற தேர்தலில் 50வீதமாகவும் மாறவேண்டும். அதற்கான சட்டத்திருத்தத்தை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும்.

அதுமட்டுமல்ல நாட்டுக்குத்தேவையான மொத்த வருமானத்தில் கணிசமான பங்கினை பெண்களே பெற்றுக்கொடுக்கின்றனர். மலையகப்பெண்கள் மத்தியகிழக்குநாடுகளுக்குச்செல்லும் பெண்கள் சுதந்திரவர்த்தகவலயபெண்தொழிலாளிகள் என்று பெண்களே பெரும்வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றனர்.
எனவே அரசியலில் 50வீத இடத்தை பெண்களுக்கு வழங்கவேண்டும்.

85ஆயிரம் விதவைகள்?
கடந்தகால யுத்தத்தினாலும் இனவன்முறையினாலும் நாட்டில் 85ஆயிரம் விதவைகள் உருவாகியுள்ளனர். வடக்குகிழக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் இராணுவத்தினரின் மனைவியர் ஆயிரக்கணக்கில் விதவையாகியுள்ளனர்.

அந்த கசப்பான அனுபவங்களிலிருந்து இன்னமும் நாம்கற்றுக்கொள்ளவில்லையா? அண்மையில் ஏற்பட்ட கண்டிக்கலவரம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? எதற்காக தோற்றுவிக்கப்பட்டது? என்பதை கண்டறியாமல் தொடர்ச்சியாக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. முடிவு என்ன? அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்.

ஊடகதர்மம்?
இங்குள்ள ஊடகவியலாளர்கள் தரமானவர்கள். அண்மையில் மலையைகத்தில் சபை அமைப்பின்போது ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்ணை செருப்புடன் சித்திரிக்கும் படத்தை முன்பக்கத்தில் ஒரு ஊடகம் போட்டிருக்கிறது. அதன்பின்னால் மிகமோசமாகச்செயற்பட்ட ஆண்களை அதுகாட்டத்தவறியுள்ளது.
அங்கே ஊடகம்பொறுப்பற்று நடந்துள்ளது.
பெண்கள் தற்போதுதான் அரசியலில் ஆரம்பவகுப்பு மாணவர்கள். ஆனால் ஆண்களோ பட்டம் முடித்தவர்கள். எனவே அவர்கள் அவர்களோடு போட்டிபோட முன்வருவதா?

வேள்விக்கு கேள்வி அதிகம்!
எமது வேள்வி அமைப்பு 2014இல் தொடங்கி இந்தகுறுகியகாலத்தில் இத்துணை வளர்ச்சிகண்டுள்ளமையையிட்டு மகிழ்வடைகின்றேன்.
எமது அமைப்பின் 13பேர் உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ளீர்கள். பாராட்டுகின்றேன்.
இனி வேள்விக்கு கேள்வி அதிகம்.இனிமேல் அரசியல்கட்சிகள் எம்மைநாடிவருவார்கள். ஆனால் நாம் பணத்திற்கோ பதவிக்கோ சோரம்போகக்கூடாது.
அரசியல் சாக்கடை என்பார்கள். பெண்களாகிய நாம் அதனை தூய்மைப்படுத்தவேண்டும். சுத்தமான அரசியலை நாம்செய்யவேண்டும். நிதியோடு விளையாடுவது சிரமம்.
எமக்கெதிரான அடக்குமுறைகளை நாம் வன்முறைகொண்டு அடக்கக்கூடாது . மாறாக மூளையைப்பாவித்து ஊடகங்களின் துணையோடு அதனை முறியடிக்கவேண்டும்.
2030இல் நிலையான அபிவிருத்தி இலக்கை நோக்கிச்செல்ல 17நல்லவிடயங்களை ஜக்கியநாடுகள் ஸ்தாபனம் முன்வைத்திருந்தது. அதனை உலகநாடுகளும் இலங்கையும் ஏற்றுள்ளது. அதன்படி எமது செயற்பாடுகள் அமையவேண்டும் என்றார்.
இறுதியில் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட 55பேரும் பாராட்டப்பட்டார்கள். குறிப்பாக உறுப்பினராகத் தெரிவான 13பேரும் விசேசமாக பாராட்டப்பட்டார்கள்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -