க.கிஷாந்தன்-ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர். அப்துல் அஸீஸ் அவர்களின் 28 வது சிரார்த்ததினம் 29.04.2018 அன்று அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில் மலை நாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்ட பிரதேசத்தில் அஸீஸ் மன்ற அமைப்பாளர் ஆர். ராமையா தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் அஸீஸ் மன்றத்தின் தலைவர் அஸீஸ் அஸ்ரப், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
புதிதாக அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டப்பகுதியில் அமரர். அஸிஸ் அவர்களின் பெயர் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அத்தோடு அஸீஸ் மன்றத்தின் ஊடாக டொரிங்டன் தமிழ் வித்தியாலத்திற்கு தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் அப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக அப்பியாச கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -