அட்டனில் 30 ஆம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேடக்கூட்டம் : அமைச்சர் திகாம்பரம் கலந்து கொள்வார்


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டித் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு அட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தெரிவித்தார்.
எதிர்வரும் மேமாதம் 7 ஆம் திகதி தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம் பெறவுள்ள மேதினக் கூட்டம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டித் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக்கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் இந்தக்கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் , மாகாணசபை உறுப்பினர்கள் , சங்கத்தின் நிருவாகசபை உறுப்பினர்கள் ,பிரதேச சபை உறுப்பினர்கள் , மாநகரசபை உறுப்பினர்கள் , நகரசபை உறுப்பினர்கள் , அமைப்பாளர்கள் , இணைப்பாளர்கள் , மாவட்டத்தலைவர்கள் , இளைஞரணி மற்றும் மகளிரணி இணைப்பாளர்கள் , தொழிற்சங்க பணி மனை உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -