கடந்த காலத்தில் வட கிழக்கு யுத்தத்த சமரின்போது 10வது கஜபா ரெஜிமெந்து பிரிவின் இரானுவ அதிகாரியான ஜே.பி.ரீ. ரவிந்து தனது இரண்டு கண்களையும் இழந்திருந்தாா். அவரது குடும்பத்துக்காக வீடொன்றை பெற்றுத் தருமாறு அவா் அமைச்சா் சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.
அவரது வீட்டுப் பிரச்சினையை தீா்த்து வைக்குமுகமாக மொரட்டுவை அங்குலானையில் உள்ள தொடா் மாடி வீடமைப்புத் திட்டத்தில் 35 இலட்சம் ருபா பெறுமதியான வீட்டிற்கான திறப்பினையும் உரிமைப்பத்திரத்தினையும் இன்று(09) வீடமைப்பு அமைச்சில் வைத்து அமைச்சா் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தாா். அருகில் அமைச்சின் செயலாளா் பேர்னாட் வசந்த, இரானுவ புனா்வாழ்வு அதிகார சபையின் பிரிகேடியா் சாந்த திருநாவுக்கரசு அருகில் காணப்படுகின்றனா்.