அ/தெம்பிரியெத்தாவெள முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 40 வருடங்களின் பின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

னுராதபுரம் ஹொரவப்பொத்தான பிரதேச சபைக்கு உட்பட்ட தெம்பிரியெத்தாவெள எனும் பின் தங்கிய கிராமத்தியில் அமையப்பெற்றுள்ள அ/தெம்பிரியெத்தாவெள முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம் ஒன்றை அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது அயராத முயற்சியினால் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினூடாக பெற்றுக்கொடுத்தார்.
200 இற்கும் அதிகமான மாணவர்களை உள்ளடக்கிய இப்பாடசாலைக்கு சுமார் 40 வருடங்களுக்கு பிறகே இப்படியொரு புதிய கட்டிடம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியான அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானோடு, முன்னாள் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் சஹீது சேர், ஹொரவப்பொத்தான பிரதேச சபை முதல்வர் சாறு உதயங்க, ஹொரவப்பொத்தான பிரதேச சபை உறுப்பினர்களான பாசில் ஆசிரியர், அலி ஆசிரியர் மற்றும் குவைத் நாட்டு தூதரகத்தின் பிரத்தியேக செயலாளர் நூறுல்லாஹ், பிரபல சமூக சேவையாளர் A.R.M.தாரிக் ஹாஜியார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கருத்து தெரிவிக்கையில்,
இன, மத, கட்சி பேதங்களை மறந்து அனைத்து மக்களும் ஒன்று பட்டால் மாத்திரமே பின்தங்கிய நிலையில் காணப்படும் எமது கிராமங்கள் மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து நாமும், நமது நாடும் செழிப்பானதொரு எதிர்காலத்தை அடைய முடியும், இல்லையேல் இன்னுமின்னும் நாம் பின்தள்ளப்படுவோம். ஆகவே நம்மையும் நம் நாட்டையும் கட்டியெழுப்ப இன, மத, கட்சி பேதங்களை மறந்துஅனைவரும் கை கோர்க்க தயாராக வேண்டும் என தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -