பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் வீ .எஸ். இதயராஜாஅவர்கள் கலந்து கொண்டார். சிறப்பதியாக சிவஸ்ரீ கே.வைதீஸ்வர குருக்கள் கலந்துகொண்டார்.
காலஞ்சென்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை முன்னாள் பணிப்பாளர்திரு. திருஞானசுந்தரம் அவர்கள் நினைவுக்கூரப்பட்டார்.
உலக கவிதை தினம் பற்றி கவிஞர் ஈழகணேஷ், டாக்டர் தாசிம் அகமது, கவிஞர் மேமன்கவிஆகியோர் உரையாற்றினார்.
விசேட அதிதியாக கலந்துகொண்ட முன்னாள் கல்விப் பணிப்பாளரும் நானும் எனதுதேவதையும் கவிதை நூலின் ஆசிரியருமான வீ.எஸ். தியாகராஜா அவர்கள் தனதுரையில், ‘கரும்பு தின்ன கூலியா என்பார்கள். அதனைப்போல் என்னை மிகச் சிறப்பான நிகழ்வுக்குஅழைத்திருக்கிறீர்கள். கவிதாயினி சுபாஷினி இக் கவியரங்கில் மரபுச் சுவைச் சொட்ட மிகஅழகாக இக் கவியரங்கை நடத்திச் சென்றார். வாழ்த்துகள். உலகம் எங்கும் கவிதைகள்விரிந்துள்ளன. ஆங்கில, பிரென்ச், உர்து, ஜேர்மனிய என்று எல்லா மொழிகளிலும் கவிதைகள்இருக்கின்றன. இக் கவிதைகளின் போக்குகளிலிருந்து தமிழ் கவிதைகளின் போக்குகள்மாறுபற்றிக்கின்றன என்று சொல்ல முடியாது. கவிதைகள் தம்மை சூழவுள்ள நடப்புகளையேபிரதிபலிப்பவைகளாக அமைகின்றன. எமது நாட்டைப் பொறுத்தவரை நான் தருமு சிவராமு என்கின்ற பிரமிள் , சோலைக்கிளி போன்றவர்களை மிகவும் ரசித்திருக்கின்றேன்.அமெரிக்ககவிஞன் வோல்ட் விட்மன் புல்லின் நுனிகள் கவிதையை 36 வருடம் திருத்தி எழுதியிருக்கிறார். 1800 ம் ஆண்டு எழுதப்பட்ட அமெரிக்கா எங்கே போகிறது என்ற அவரது கவிதை இன்றும்சிலாகித்துப் பேசப்படுகிறது. மிக பிரபலமான ஆபிரிக்கக் கவிதை ஒன்று, எங்கள் கைகளில்நிலங்கள் இருந்தன, அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது. அவர்களின் வேண்டுகோளின்படிகண்ணை மூடி பிரார்த்தித்தோம். கண்ணைத் திறந்து பார்த்தபோது எங்கள் கைகளில்பைபிள் இருந்தது அவர்கள் கைகளில் நிலங்கள் இருந்தன. எனக்கு பிடித்த நைஜீரிய கவிதைமுன்னொரு காலத்திலே நெஞ்சத்தினாலே சிரித்து வந்தார் , இப்போது பற்களாலேயேசிரிக்கிறார்கள்...... என்ற கவிதையும் இன்று எங்களுக்கும் பொருத்தமான கவிதை. என்றுமிகவும் ஆழமாகவும் சுவையாகவும் உரையாற்றினார்.
கவிதாயினி சுபாஷினி பிரணவன் 47 வது கவியரங்கிற்கு தலைமை தாங்கினார். கவிஞர்கள்வதிரி சி. ரவீந்திரன், எம். பிரேம்ராஜ், எஸ். தனபாலன், கிண்ணியா அமீர் அலி, எம்.எஸ்.தாஜ்மஹான், மஸீதா அன்சார், எம். பாலகிருஷ்ணன், கவிக்கமல் ரஸீம், சுலோச்சனாசண்முகநாதன், தேஜஸ்வினி பிரணவன், கம்மல்துறை இக்பால், பேருவளை இம்லாஸ்முஹம்மத்,
அப்துல் லத்தீப், வெளிமடை ஜஹாங்கீர், உடுகொடை யஹ்யா அய்யாஷ் , ஆயிஷாசித்திக்கா, பாணந்துறை நிஸ்வான், பேருவளை பரீஹா பாரூக், ராஹிலா ஹலாம்,வெலிப்பன்னை அத்தாஸ் ஆகியோர் கவிதை பாடினர்.
சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி, கொக்குவில் கே.எஸ்.சிவஞானராஜா, எழுத்தாளர்ஏ.எஸ்.எம். நவாஸ், ஏ.எம்.எஸ்.உதுமான், மலாய்கவி டிவங்சோ, நூருல் அயின் நஜ்முல்ஹுசைன், பாத்திமா மைந்தன் அன்சார், எம்.எம்.ரூமி போன்றோர் சபையை அலங்கரித்தனர்.