பொதுநலவாய வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்க ரிஷாட் தலைமையில் 50 பேர் லண்டன் பயணம்...

ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-

ண்டனில் இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக அமைப்பின் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழு ஒன்று அடுத்தவாரம் அந்தநாட்டுக்கு பயணமாகின்றது.

1997ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைப்பின் கூட்டம் இம்முறையே முதன்முதலாக லண்டனில் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து என்றுமில்லாத வகையில் பெரும்பாலான வர்த்தகர்கள் பங்கேற்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“பொதுநலவாய வர்த்தக அமைப்பின் இந்தவருடத்தின் மூலோபாய பங்குதாரராக இலங்கை செயலாற்றுகின்றது. எனவே, எனது அமைச்சின் கீழான வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் பலநாடுகளின் பங்குபற்றலுடனான இலங்கையின் முதலீட்டுத்துறை சார்ந்த வட்டமேசை மாநாடுகள் லண்டன் பொதுநலவாய வர்த்தக கூட்டத்தில் இடம்பெறுகின்றது.” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பொதுநலவாய வர்த்தக கூட்டத்தில் பங்கேற்கவுள்ள வர்த்தகர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் இடம்பெற்ற முன்னோடி இந்தக்கூட்டத்தில் அமைச்சர் இந்த தகவலை குறிப்பிட்டார். வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் சொனாலி விஜயரட்ண இலங்கையின் சர்வதேச வர்த்தக கவுன்சிலின் தலைவர் கோசல விக்ரமநாயக்க ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தன. இம் மாதம் 16 தொடக்கம் 18ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கும் இந்தக்கூட்டத்தில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையும் பங்கேற்கின்றன.

பொதுநலவாய நாடுகளுடனான வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இலங்கை ஒரு பாரிய பங்களிப்பை நல்கிவருகின்றது. இலங்கையின் வருடாந்த சர்வதேச வர்த்தகத்தில்; 27சதவீதத்தினை பொருட்கள் அடிப்படையிலும் 40சதவீதத்தினை சேவைகளின் அடிப்படையிலும் பொதுநலவாய நாடுகளுக்கு இலங்கை வழங்குகின்றது. பொதுநலவாய நாடுகள் இலங்கையின் புதிய வர்த்தக மறுசீரமைப்பிற்கு அமைதியானதும் குறிப்பிடத்தக்கதுமான பாத்திரத்தை வகிக்கின்றது.

சர்வதேச ரீதியில் இடம்பெறும் வர்த்தகக் மாநாட்டில் தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் துறைகளில் நாட்டுக்கான தூய அறிவுள்ள தீர்வுகள் என்ற தொனிப்பெருளில் அறிமுகப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -