இந்தப் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் 2015ம் ஆண்டு செப்ரெம்பர் 2ம் திகதி ஆரம்பமானது. கடந்த 12ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலாவது கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவந்திருந்தர். என்பத குறிப்பிடத்தக்கது.
அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டதால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைகள் மீது எதுவித தாக்கம் குறித்து விபரித்த பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். எனினும், கோப் குழு கலைக்கப்பட்டு, இரண்டாவது கூட்டத்தொடர் ஆரம்பமான பின்னர், புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
அரசியல் யாப்பின் 70ம் ஷரத்தின் ஊடாக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி இரண்டாவது கூட்டத்தொடருக்கான திகதிகளை நிர்ணயித்திருந்தார். ஒவ்வொரு துறை சார்ந்த 16 மேற்பார்வை குழுக்கள் மாற்றம் இன்றி செயற்படும். முதல் கூட்டத்தொடரில் முறையாக ஒழுங்குபத்திரத்தில் சேர்க்கப்பட்ட பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமென பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.