முச்சக்கரவண்டி ஒன்றில் போதைக்காக பாவிக்கப்படும் 800 மாத்திரைகள் மற்றும் 5 கிராம் கஞ்சா உடன் மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த வாழைச்சேனை அஸ்ஹர் பாடசாலை வீதியை சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவனை செங்கலடி பிரதான வீதி சந்தியில் வைத்து ஏறாவூர் பொலிசார் செய்துள்ளனர் .
கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பீரிஸ் இன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் சத்துரங்க, பொலிஸ் சார்ஜன்ட் பதுர்தீன் மற்றம் பொலிஸ் உத்தியோகத்தர்களான வித்தியாரட்ன , மிஸ்பாஹ் ஆகியோர் அடங்கிய குழவினரே குறித்த சந்தேக நபரை இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை கைது செய்துள்ளதுடன் போதைக்காக பயன்படுத்தப்படும் 800 மாத்திரைகளையும் , 5கிராம் நிறையுள்ள கஞ்சாவினையும் கைப்பற்றி உள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.