இன்று சித்ரா பௌர்ணமி தினம்:தாயை இழந்தவர் பிதிர்க்கடன்: சுவாமி விபுலாநந்தஅடிகளின் 94வது துறவறதின நிகழ்வு இன்று!

காரைதீவு நிருபர் சகா-
ந்துக்கள் கொண்டாடும் சித்ரா பெர்ணமி தினம் இன்று(29.04.2018) ஞாயிற்றுக்கிழமை ஆகும்.

இதேபோன்றொரு சித்ரா பௌர்ணமி தினத்தில் தான் காரைதீவைச்சேர்ந்த பண்டிதர் மயில்வாகனன் சுவாமி விபுலாநந்தராகினார். 1924இல் சுவாமி சிவானந்தரை குருவாக்கொண்டு விபுலாநந்தர் என் நாமத்தைப்பெற்றார்.

இன்றைய சித்ராபௌர்ணமியின் சிறப்பு!

தந்தையை இழந்தவர்கள் ஆடிஅமாவாசையில் விரதமிருந்து வழிபாடு செய்வதைப்போன்று தாயை இழந்தவர்கள் சித்ரா பௌர்ணமியில் விரதமிருந்து வழிபாடு செய்வார்கள். அதாவது பிதிர்க்கடன் செலுத்தும் நாள்.

சூரியனை பித்ருகாரன்(தந்தையை நிர்ணயிப்பவன்) என்றும் சந்திரணை மாத்ருகாரன்( தாயை நிர்ணயிப்பவன்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும்நாளில் மூதாதையர்களுக்கு பிதிர்க்கடன் செலுத்துகின்றோம்.

சித்திரைமாதம் சித்திரை நட்ச்திரத்துடன்கூடி வரும்பௌர்ணமி சித்ராபௌர்ணமி தினமாகும். அன்று சித்ரகுப்தரை விரதமிருந்து வழிபடும் நாளாகும். இதுவொரு பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.
ஒருதடவை பார்வதிதேவி கயிலையில் தங்கப்பலகையில் சித்திரமொன்றை வரைந்து சிவனிடம் உயிர்கொடுக்குமாற வேண்ட அவர் கொடுத்த உயிரே சித்திரகுப்தனாவார். அதாவது சித்திரத்திலிருந்து தோன்றிய சித்திரபுத்திரன் என்றும் சித்ரகுப்தன் என்றும் அழைத்ததாக வரலாறு கூறுகிறது.

இன்றையதினம் சந்திரபகவான் தம் பூரண கலைகளுடன் பிரகாசிப்பதால் அதிசக்திவாய்ந்த தினமாக கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட தினத்தில்தான் சுவாமி விபுலானந்தர் சுவாமி சிவாநந்தரிடம் ஞானோபதேசம் பெற்றிருக்கின்றார் என்றால் அது மிகைப்பட்டகூற்றல்ல.

இன்று 94வது துறவறதின நிகழ்வு!

இதேவேளை இன்று(29) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின 94வது துறவறதின நிகழ்வு அவர்பிறந்த காரைதீவ மண்ணில் நடைபெறவிருக்கிறது.
சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணி மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநிலத்தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருக்கிறார்.

காரைதீவு சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மலை அணிவித்து துறவறகீதம் இசைக்கும் நிகழ்வோடு ஆரம்பித்து கல்லடியிலுள்ள சுவாமியின் சமாதிக்கு சென்று வழிபட்டு ஆச்சிரமத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது..






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -