முதல்அமர்வை அசௌகரியத்திற்குள்ளாக்கிய மின்சாரத்தடை!

காரைதீவு நிருபர் சகா-
ல்முனை மாநகரசபையின் மேயர் பிரதிமேயரைத் தெரிவுசெய்யும் முதல் அமர்வு மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் பலத்த அசௌகரியத்துக்குள்ளாகியது.
நேற்று முன்தினம் (2) பிற்பகல் 2.45மணியளவில் ஆரம்பித்த முதல் அமர்வு 3.15மணியளவில் புதிய மேயர் தெரிவாகி பிரதிமேயரைத்தெரிய ஆரம்பிக்கின்றவேளை மின்சாரம் தடைப்பட்டது.

குறித்த மண்டபத்துள் 41உறுப்பினர்கள் இருப்பதற்கான ஆசனங்கள் அதைவிட ஊடகவியலாளர்களுக்கும் முக்கியமான பார்வையாளர்களுக்கும் மிகநெருக்கமாக சொற்பமாக போடப்பட்ட ஆசனங்கள். நாலாபுறமும் அடைக்கப்பட்டிருந்தது. குளிருட்டிவசதி இல்லை.

மின்விசிறியிருந்தும் ஒருவித புழுக்கம் மண்டபத்துள் நிலவியது. அவ்வேளையில் மின்சாரம் தடைப்பட்டதும் ஒரே புழுக்கம் இருட்டு காற்றின்மை பார்வையாளரின் ஆரவாரம் ஒருபுறம்.

மின்தடைப்பட்டதும் ஜெனரேட்டரை இயக்குவதற்கு போதும் போதுமென்றாகிவிட்டது. குறித்த மண்டபத்திற்கு மாத்திரம்கூட உடனடியாக மின் வழங்குவதற்கு முடியாமல்போய்விட்டது அந்த நிருவாகத்திற்கு.
மின்பிறப்பாக்கி அரைகுறையாக இயங்குவதும் மின்வருவதும் போவதுமாக இருந்தது. புதிய மேயரோ ஒலிவாங்கி இல்லாமல் பேசிக்கொண்டிருந்தார்.
சுமார் 15நிமிட நேரம் மின்சாரமில்லாமல் ஜெனரேட்டரை முறையாகப்பயன்படுத்தமுடியாமல் அங்கிருந்தவர்கள் பெரும் அசௌகரியத்துக்குள்ளாகியதைக்காணமுடிந்தது.
மாவட்டத்திலுள்ள பெரிய மாநகரசபையின் நிலையை எண்ணி அழுவதா சிரிப்பதா? என்று தெரியவில்லையென்று கௌரவ உறுப்பினரொருவர் குறிப்பிடத்தவறவில்லை.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -