கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆர்.டி.எச்.எஸ். அணியினர் அபார வெற்றியீட்டி சம்பியனாக தெரிவாகினர்


எஸ்.அஷ்ரப்கான்-
டக்கு கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
பணிமனைகளுக்கிடையிலான கல்முனை ஆர்.டி.எச்.எஸ். சவால் கிண்ணம்-2018 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஆர்.டி.எச்.எஸ். அணியினர் அபார வெற்றியீட்டி சம்பியனாக தெரிவாகினர்.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய கல்முனை அணியினர்
களத்தடுப்பை தெரிவுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் முடிவில் 54 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை அணியினர் 9.4 ஓவர்களில் 9
விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்து சம்பியனாகினர். வெற்றிபெற்ற கல்முனை அணியினருக்கான வெற்றிக் கேடயம், பணப்பரிசில்களை பிரதம அதிதி கிழக்கு மாகாண ஆளுணர் ரோஹித போகொல்லாகம வழங்கிவைத்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் 30. 03.2018 கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த வவுணியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அணிகள் பங்கு கொண்டன.

இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் மற்றும் கல்முனை
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அணிகள் மோதிக்கொண்டன. 31.03.2018 சனிக்கிழமை இடம்பெற்ற இவ்விறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுணர் ரோஹித போகொல்லாகம கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -