கல்முனை மாநகரசபையின் கன்னி அமர்வு! ஆசன ஒழுக்கமைப்பால் ஒன்றரைமணிநேரம் தாமதித்து ஆரம்பம்!

காரைதீவு நிருபர் சகா-
ல்முனை மாநகரசபையின் கன்னி அமர்வு நேற்று(26) வியாழக்கிழமை மாநகர முதல்வர் சட்டத்தரணி எ.எம்.றக்கீப் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
ஆசன ஒழுங்கமைப்பில் ஏற்பட்ட புரிந்துணர்வின்மை காரணமாக ஒன்றரை மணிநேரம் தாமதித்தே அமர்வு ஆரம்பமானது.

முன்னதாக ஆசன ஒழுங்கு தொடர்பில் ஒருமணிநேரத்திற்கும் மேலாக முதல்வர் அறையில் சில உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

பின்னர் சபைக்குவந்தபின்னரும் ஆசன ஒழுங்கமைப்பில் சிறுசலசலப்பு வரவே முதல்வர் நேரடியாகத்தலையிட்டு ஆசனங்களை உறுப்பினர்களுக்கு வழங்கிவைத்தார்.
நேரடியாக மாநகர முதல்வர் சபைக்குள்வந்து ஆசன ஒழுங்கமைப்பை தானாகவே மேற்கொண்டதை பலரும் பார்த்து வியந்தனர்.
சாய்ந்தமருதைச்சேர்ந்த சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் ஒன்பதுபேர் முதன்முறையாக சபைக்கு நேற்று சமுகமளித்திருந்தனர்.

கடந்த தடவை இடம்பெற்ற மேயர் பிரதிமேயர் தெரிவின்போது இச் சுயேச்சை அணியினர் சபையை அமர்வைப்பகிஸ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10மணிக்கு ஆரம்பமாகவேண்டிய கன்னி அமர்வு 11.30மணிக்கே ஆரம்பித்தது. பொதுசமய வணக்கத்துடன் முதல்வரின் கன்னிஉரை இடம்பெற்றது.


6வது முதல்வரின் கன்னியுரை!
கன்னிஉரையில் குறிப்பிட்டதாவது:

மூவின மக்களும் வாழும் கல்முனை மாநகரை இனமதபேதமற்று அணைவரும் இணைந்து இதயசுத்தியுடன் கட்டியெயழுப்பவேண்டும்.

கல்முனை மாநகரசபையின் 6வது முதல்வர் நான். ஏலவே 2தடவைகள் மாநகரசபை உறுப்பினராகவும் சிரேஸ்ட்ட சட்டத்தரணியாகவும் உள்ள அனுபவத்தை வைத்துக்கொண்டு தங்களின் ஒத்துழைப்புடன் இம்மாநகரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளேன்.

1லட்சத்து 50ஆயிரம் பேர் பயன்படுத்தும் கல்முனை மாநகரசபையின் கடந்தகால செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியுடன் இருந்நததை பொதுவாக அனைவரும் அறிவார்கள்.

எனவே நாம் புதிய குழுக்களை அமைத்து சமத்துவமாக மக்களுக்கான சேவையைச்செய்யவேண்டும்.
41உறுப்பினர்கள் அமர்வதற்கு இந்தமண்டபம் போதாது. 41உறுப்பினர்களும் அமர்வதற்கு தற்காலிக ஏற்பாடே இன்று புரிந்துணர்வு அடிப்படையில் செய்யப்பட்டது. எதிர்காலத்தில் அனைவரும் முன்வரிசையில் இருக்கத்தக்கவாறு புதிய மண்டபம் கட்டப்படவுள்ளது. பிரதியரமச்சர் ஹரீஸ் தலைவர் ஹக்கீம் ஆகியோரின் பங்களிப்பிலே புதிய மண்டபம் கிடைக்கவிருக்கிறது.

எமக்கரிய 65தொழிலாளிகளை வைத்துக்கொண்டே நகர சுத்தி வேலையசை;செய்யவேண்டியுள்ளது. மாநகரசபையின் தணிம்மக்கழிவு முகாமைத்துவம் என்பது பாரிய சவாலாகவுள்ளது. 12வாகனங்கள் இயங்கு நிலையிலுள்ளன. அவற்றைவைத்துக்கொண்டே சகல பணியையும் செய்யவேண்டியுள்ளது. எனவே அவற்றையும் அபிவிருத்தி செய்யவேண்டும்.

இதே தரத்திலான கண்டி மாநகரசபையில் 200 தொழிலாளிகளுள்ளனர். எனவே நாமனைவரும் ஒன்றிணைந்து இனமதபேதமின்றி இயதசுத்தியுடன் இம்மாநகரத்தை அபிவிருத்திசெய்யவேண்டும். என்றார்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -