கண்டி திகன ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் ஒரே குடுபத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என மெனிக்கின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் வசித்த தந்தை, மகள், மகன் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் 09.04.2018 அன்று இரவு வேளையிலேயே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் தந்தையான புஷ்பகுமார பிரேமதிலக்க (வயது – 37), மகள் நவாஞ்சன பிரேமதிலக்க (வயது – 13), மகன் கயான் பிரேமதிலக்க (வயது – 05) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிள்ளைகளின் தாய் மத்திய கிழக்கு நாட்டில் வீட்டு பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.
சம்பவம் ஏற்படுவதற்கு சில நேரங்களுக்கு முன் அயல் வீட்டில் இரவு உணவுக்காக அயல் வீட்டிலிருந்து இடியாப்பம் பெற்று வந்ததாகவும், அதேவேளையில் புதுவருடத்திற்கான புத்தாடைகள் பெற்று வந்து பிள்ளைகளிடம் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு காரணம் என்னவென்ன இதுவைரயும் தெரியாதநிலையில் கிராமவாசிகள் இருப்பதாகவும், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மெனிக்கின்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.