காத்தான்குடி பிரதான வீதியில் நடைபாதையில் வியாபாரத்திற்காக வைக்கப்பட்ட பொருட்களை முன் அறிவித்தல் இன்றி நகரசபையால் பறிமுதல் செய்யப்படும்- நகர முதல்வர்


பஹ்த் ஜுனைட்-
காத்தான்குடி பிரதான வீதியில் கடைகளுக்கு வெளியே உள்ள நடைபாதைகள் மீது வியாபார பொருட்களை வைத்திருப்பது சட்டவிரோதமான செயலாம் இவ்வாறாக பொருட்களை வைத்து பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வியாபாரிகளினது பொருட்களை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் காத்தான்குடி நகர சபையினால் பறிமுதல் செய்யப்படும். அதே போல் காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் நிரந்தமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதற்கும் அனுமதியில்லை என இன்று இரவு காத்தான்குடி நகர சபையின் முதல்வர் S.H.M.அஸ்பர் (jp) அவர்களின் முகநூலில் இடம்பெற்ற நேரடி நிகழ்வில் இது தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெறிவித்தார்.
இதே போன்று காத்தான்குடியின் அபிவிருத்திகள்,ஒழுங்குகள், நகர சபையின் திட்டங்கள் தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் சிறப்பாக பதில் வழங்கினார்.
தற்பொழுது காத்தான்குடி நகரசபையின் முதல்வர் பதவியை பொறுப்பெடுத்துள்ள S.H.M.அஸ்பர் (jp) அவர்களே கடந்த நகர சபை ஆட்சிகாலத்திலும் நகர சபை முதல்வராக கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -