வர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாத ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் ?


ர்த்தமானி ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதிஎவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் அதன் பின்னர்ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது மேலும் குறிப்பிட்டதாவது,
இம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவசர அவரசமாகபாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார் அவர் அதற்காக வெளியிட்ட வர்த்தமானியில்பாராளுமன்றம் ஆரம்பமாகும் நேரம் சரியாக குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்தால்மீண்டும் ஒரு வர்த்தமானி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
இரண்டாவது வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவிப்பிலும் பிழை இருப்பதாகசுட்டிக்காட்டப்பட்ட பின்னர் மீண்டும் நேற்று இன்னுமொரு வர்த்தமானி அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.ஆளுநரை தவறாக நியமிப்பது அமைச்சரை தவறாக நியமிப்பதுஎன இது போன்ற சம்பவங்கள் பலவற்றை நாம் இந்த ஆட்சி நெடுகிலும் கண்டுவந்துள்ளோம்.
நாட்டின் மிக முக்கியமான சட்ட திருத்தங்களை அரசு கொண்டுவரவுள்ளதாக கூறும்நிலையில் வர்த்தமானி அறுவிப்பு ஒன்றை சரியாக வெளியிடத் தெரியாதவர்களை உடன்வைத்துக்கொண்டு நாட்டை எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என கேள்வி எழுப்பினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -