மருதமுனை சிறுவர் பூங்கா அழகுபடுத்தும் திட்டம்; முதல்வரின் நேரடி கண்காணிப்பில் ஆரம்பம்

அஸ்லம் எஸ்.மௌலானா-
சுனாமி அனர்த்தத்தினால் அழிவடைந்த மருதமுனை மஷூர் மௌலானா வீட்டுத் திட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை அழகுபடுத்தும் பொருட்டு முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இன்று செவ்வாய்க்கிழமை சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாநகர சபையின் பெக்கோ இயந்திரம் மற்றும் வாகனங்களுடன் ஊழியர்கள் பலர் இப்பூங்கா பகுதியிலுள்ள கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
முழுநாள் இடம்பெற்ற இச்சிரமதான நடவடிக்கைகளை சுமார் மூன்று மணித்தியாலங்கள் களத்தில் நின்று நெறிப்படுத்திய முதல்வர், இப்பூங்காவுக்கு எல்லையிடுதல், உள்ளக வீதிகள் அமைத்தல், அழகுபடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 83 இலட்சம் ரூபா நிதியில் இச்சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -