பெருந்தலைவர் அஸ்ரஃபினுடைய காலம் தொடக்கம் சமகாலம் வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சிக்கு உள்ளே சரி அல்லது வெளியே சரி எந்த வித சவால்களையும் எதிர்கொண்டு சாமர்த்தியமாகவும், தேவைப்படும் சந்தர்ப்பத்தில் துணிச்சலுடனும் முஸ்லிம் சமூகத்திற்காக தீர்மானங்களை எடுக்க கூடிய தலைமை என்றால் அது முஸ்லிம் காங்கிரசின் தலைமை ரவூப் ஹக்கீமைத்தான் கூறுவேன் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சரும் சட்டத்தரனியுமான வேதந்தி சேகு இஸ்ஸடீனை சந்தித்த வேலையில் என்னிடம் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் நான் கட்சியின் ஆரம்பகால இஸ்தாபகர் என்ற வகையில் இஸ்தாபக தலைவருடன் இருக்கத்தின் அடிப்படையில் மர்ஹும் அஸ்ரஃப் உயிருடன் இருந்திருந்தால் கூட இன்று முஸ்லிம் காங்ரஸ் எதிர்கொள்ள கூடிய சவால்கள், மற்றும் கட்சியிலிருந்து சுய இலாபங்களுக்காக பிறிந்து சென்று கட்சியினை அழிக்க துடிக்கின்றவர்களுடைய திட்டங்களை ரவூப் ஹக்கீமை போன்று பதட்டமில்லாமல் எதிர் கொண்டிருக்கமாட்டார். அத்தோடு சர்வதேசத்திற்கு இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ள கூடிய பிரச்சனைகளை ஒரு சரியான முறையில் அதற்கான மொழிவளத்துடன் இராஜதந்திரத்துடன் சமர்பிக்க கூடிய சகல விதமான ஆற்றல்களையும் வைத்திருப்பது மட்டுமல்லாமல் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள கூடிய சிறுப்பான்மை இனத்தின் தலைவராகவும் நான் ரவூப் ஹக்கீமை பார்க்கின்றேன்.
முஸ்லிம் காங்கிரசின் யாப்பினை வரைந்தவர், பெரும் தலைவருடன் சேர்ந்து கட்சியினை இஸ்தாபித்தவர், இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர், துணிச்சலுடன் 89-90 காலப்பகுதியில் இனக்கலவரங்களில் இருந்து முஸ்லிம்களை பாதுகாத்தவர், தனது எழுத்தின் மூலம் சமூகத்திற்கு சிந்திக்க கூடிய செய்திகளை கூறுகின்றவர், சட்டத்தரனி பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், எல்லாத்திற்கும் மேலாக சிறந்த ஆசிரியர் போன்றவைகளுக்கு சொந்தக்காரன் என்ற அடிப்படையில் பெற்றுள்ள அனுபவத்தினால்தான் வேதாந்தி இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரசின் தலைமை ரவூப் ஹக்கீமிற்கு இவ்வாறு சேர்ட்டிபிகேட் கொடுக்கின்றார் என நினைத்தேன்.. ஆனால் கடந்த உள்ளூராட்சி தேர்தல் மேடைகளில் எதற்காக ரவூப் ஹக்கீமை பாரதூரமாக விமர்சித்தார் என்பதுதான் புரியவில்லை.