கல்முனை மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் 102 பேருக்கு மாதாந்த சம்பளம் வழங்குவதற்கு சபையின் சொந்த வருமானத்தில் இருந்து 26 இலட்சம் ரூபா செலவிடப்படுவதானது எமது சபைக்கு பெரும் சுமையாக இருப்பதனால் அவர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் முதலாவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது தலைமை வகித்து ஆரம்ப உரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்ற இந்த அமர்வில் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் உட்பட சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரும் பங்கேற்றிருந்தனர்.
அங்கு மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவிக்கையில்;
"இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி எமது மாநகர சபையின் சேவைகளை அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவமாக முன்னெடுக்கவும் அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதற்கும் நான் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.
23 வட்டாரங்களைக் கொண்ட எமது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் மக்கள் வாழ்கின்றனர். இங்கு திண்மக்கழிவகற்றல் பிரச்சினையே எமக்கு பாரிய சவாலாக இருந்து வருகிறது. இதே மக்கள் தொகையை கொண்ட கண்டி மாநகர சபையில் திண்மக்கழிவகற்றல் பணியை மேற்கொள்வதற்கு இருநூறுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் எமது மாநகர சபையில் 65 தொழிலாளர்கள் மட்டுமே அப்பணியை முன்னெடுக்கின்றனர்.
அதேபோன்று கண்டி மாநகர சபையில் திண்மக்கழிவகற்றல் சேவைக்கு 90
வாகனங்கள் உள்ளன. ஆனால் எமது சபையில் 12 வாகனங்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுகின்றன.
இப்பணிக்கான ஆளணியும் வாகனங்களும் அதிகரிக்கப்படுமாயின் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண முடியும் என நம்புகின்றேன். இதற்காக உள்ளூராட்சி அமைச்சினதும் மாகாண சபையினதும் ஒத்துழைப்பை பெற்று கொள்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளேன்.
அதேவேளை எமது மாநகர சபைக்கு புதிய கட்டிடத்தொகுதியை அமைப்பதற்கும் கல்முனை பொதுச் சந்தையை புனரமைப்பதற்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயங்களில் அவர்கள் இருவரும் மிகவும் கரிசனையுடன் பங்காற்றி வருகின்றனர்.
வியாபார அனுமதிப்பத்திரம், காணி உரிமைச் சான்றிதழ், காணி சுவீகரிப்பற்ற பத்திரம், வீதி எல்லைச் சான்றிதழ் என்பவற்றை ஒரே நாள் சேவையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்ப்பதுடன் மாநகர சபையின் வருமானத்தையும் அதிகரிக்க முடியும். எதிர்வரும் மீ மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதனை அமுல்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எமது மாநகர சபையானது ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலைமை போன்று போன்று வரவு- செலவை திட்டமிட வேண்டியுள்ளது. மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் சபையின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். செலவீனம் குறைக்கப்பட வேண்டும். வீண் விரயம் தடுக்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும். ஒளிவு, மறைவாக எதையும் செய்ய வேண்டிய தேவை இல்லை.
எமது மாநகர சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் 102 பேருக்கு மாதாந்த சம்பளம் வழங்குவதற்கு சபையின் சொந்த வருமானத்தில் இருந்து 26 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது. இது எமது சபைக்கு பெரும் சுமையாக இருப்பதனால் அவர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது சாத்தியப்படாது போனால் அவர்களின் சேவைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
எமது வரி நிலுவைகளை அறவிடுவதற்கு புதிய பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்யும் பொருட்டு சட்டத்தரணிகள் அடங்கிய சட்ட நடவடிக்கை குழு ஒன்றை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளேன்.
மாநகர சபையின் சொந்த வருமானத்தில் மாத்திரம் மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்பதனால் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அனுசரணையை பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் தீயணைப்பு படைப் பிரிவை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்பிரிவிலுள்ள பழைய வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு பதிலாக புதியவை மாற்றப்பட வேண்டும். வங்கிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு தீயணைப்பு சேவை சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தி சபைக்கான வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் இப்பிரிவுக்கான வசதிகளை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறேன்.
இவை எல்லாவற்றையும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் கூட்டுப்பொறுப்பும் அவசியம் என்பதை வலியுறுத்துகின்றேன். கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் ஒன்றிணைத்து செயற்படுவோம்" என்று முதல்வர் றகீப் வேண்டுகோள் விடுத்தார்.