சமுர்த்தி திட்டத்தின் ஊடாக முத்திரை மட்டும்தான் வழங்கப்படுகின்றது என்ற சிந்தனை மக்கள் மத்தியில் இருந்து இன்னும் மாறாத ஒரு சூழ்நிலை !

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் ! 
காரைதீவு நிருபர் சகா-
முர்த்தி திட்டத்தின் ஊடாக முத்திரை மட்டும்தான் வழங்கப்படுகின்றது என்ற சிந்தனை மக்கள் மத்தியில் இருந்து இன்னும் மாறாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்
சமுர்த்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சௌபாக்கியா வர்த்தக கண்காட்சி நேற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு பொறுப்பான முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.வரதராஜன் அவர்களின் ஏற்பாட்பாட்டில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பிரதம அதிதியாக சமுர்த்தி திட்ட மாவட்ட பணிப்பாளர் குணரெட்ணம் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள்இ சமுர்த்தி அபிவிருத்தி உத்தியேகத்தர்கள்இ கிராமசேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு பிரதேச செயலாளர் தொடர்ந்து உரையாற்றுகையில்
மிக நீண்டகாலமாக இவ்வாறான நிகழ்வுகள் சமுர்த்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அது தற்போது நீண்ட பரிநாமத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் சௌபாக்கியா சந்தை என்ற நிகழ்வாக இவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் இது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

1995 ஆம் ஆண்டு ஆரப்பிக்கப்பட்ட இந்த சமுர்த்தி திட்டத்தின் ஊடாக முத்திரை மட்டும்தான் வழங்கப்படுகின்றது என்ற சிந்தனை மக்கள் மத்தியில் இருந்து இன்னும் மாறாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. உணமையில் மக்களின் வறுமையின் தணிக்கின்ற திட்டத்தின் கீழ் பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கா ஏராளமான நிதி வங்கி சங்கங்கள் ஊடாக கடனாகவும் மானியமாகவும்இ வாழ்வாதார உதவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு வழங்கப்பட்ட நிதிகள் ஊடாக தங்களின் வாழ்வாதாரத்திற்காக உருவாக்கப்பட்ட கைத்தொழில் சாரந்த உற்பத்திகளையே இந்த சந்தையில் காட்சிப்படுத்தியுள்ளனர். உண்மையில் இவ்வாறான திட்டங்கள் ஊடாக எமது பிரதேச செயலக பிரிவில் நஞ்சற்ற சேதனை விவசாயத்திட்டத்தினை உள்வாங்கி நஞ்சற்ற விவசாய உற்பத்திகளை கூட்டுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்டும் என இதன்போது பிரதேச செயலாளர் தெரிவித்தார்......






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -