காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு
ஒரு மாணவனின் உடலிருந்து ஒரு துளி இரத்தம் சிந்துவதைக் கூட
எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
காத்தான்குடியைப் பொறுத்த மட்டில் பாடசாலைக்கு செல்வதற்காக
பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் வீதியைக் கடந்து செல்ல வேண்டி நிலையிலேயே உள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்களின் மாணவர்கள் வெள்ளை கோடுகளில் நடந்து செல்வது என்பது மிகவும் ஆபத்தானதாக உள்ளதாக பல பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பெற்றோர்களின் கவலையினை பொறுப்புடன் ஏற்று தீர்வு பெற்றுக் கொடுப்பது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும். பாடசாலை செல்லும் மாணவர்கள் விபத்துக்குள்ளாவதற்கானகாரணம்தான் என்ன........?
இது தொடர்பில் ஆய்வு செய்த போது பிரதானமாக இரண்டு விடயங்களைக்
குறிப்பிடலாம்.
(1) சாரதிகளின் கவனமின்மை.
(2) பாடசாலை நேரங்களில் போக்குவரத்து பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தப்படாமை.
காத்தான்குடியைப் பொறுத்த மட்டில் காத்தான்குடியில் சுமார்
இருபத்திரெண்டுக்கும் (22) மேற்பட்ட பாதசாரி பாதுகாப்பு (வெள்ளை கோடு)
கடவைகள் உள்ளன. இவற்றில் பிரதானமாக பாடசாலை மாணவர்கள் தினமும் பயன்படுத்துகின்றவையாக 06 கடவைகளைக் குறிப்பிடலாம்
1 ) கா-குடி மட்/ அந் நாசர் வித்தியாலயம்.
2) கா-குடி மட்/ ஹிழுரியா வித்தியாலயம்.
3) கா-குடி மட்/ அல் ஹிறா வித்தியாலயம்.
4) புதிய கா-குடி மட்/ பாத்திமா பாலிகா வித்தியாலயம்.
5) புதிய கா-குடி மட்/ அல் அமீன் வித்தியாலம்.
6) புதிய கா - குடி மட்/ மத்திய மஹா வித்தியாலயம்.
7) வீதியில் வெள்ளை கோடுகள் இல்லாமல் மட்/மீராபாலி
(தேசிய பாடசாலை) மாணவர்கள் பிரதான வீதியை கடக்கின்றனர்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான விடயம் யாதெனின் மேற்படி 7 பாடசாலைகளில் 2 பாடசாலைகளுக்கு மாத்திரமே போக்குவரத்து பொலிசார் தினமும் காலை நேரங்களில் கடமைக்கு வருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். அவையாவன.
1) மட்/மம/அந் நாசர் வித்தியாலயம்.
2) மட்/மம/மீராபாலிகா வித்தியாலயம்.
இனவதவிர ஏனைய பாடசாலைகளுக்கு பொலிஸார்
கடமைக்கு எப்போதாவது ஒரு தடவை வந்து செல்வதாக
பெற்றோர் கவலையுடன் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான பிரச்சினைகளை ஆராய்ந்து உடன் நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இன்று (25) மாலை 05.00 மணிக்கு பொலிஸ் போக்குவரத்து பொறுப்பதிகாரி அவர்களை சந்திப்பதற்காக காத்தான்குடி பொலிஸ் நிலையம் சென்ற போது பொறுப்பதிகாரி மட்டக்களப்பு சென்றிருப்பதாக அங்கு கடமையில் இருந்த ஒரு உத்தியோகஸ்தர் என்னிடம் தெரிவித்தார்.
நான் உடனே அவ்விடத்திலிருந்தவாறே தொலை பேசி ஊடாக அவருடன் தொடர்பு கொண்டு கூறினேன்
நான் உங்களை அவசரமாக சந்திக்க வேண்டும் நீங்கள் வந்தவுடன் எனக்கு Call எடுக்குமாறு கூறினேன். அவரது அழைப்பு இது வரை கிடைக்க வில்லை.
மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போதும் அவர்கள் வீடு திரும்பும் போதும் வீதிப் போக்கு வரத்துப் பொலிஸார் குறித்த 7 பாடசாலைகற்கும் தினமும் பாதுகாப்பு கடமைக்காக
வந்து போக வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.
எனவே இது விடயத்தில் தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் நாம்
அவதானத்துடன் இருப்போம்.
நாம் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம்.
அதாவது- காத்தான்குடி என்பது குறுகிய நிலப்பரப்பினுல்
அதிகமான மக்கள் மிகவும் செறிந்து வாழும் நகரமாகும்.
காத்தான்குடியைப் பொறுத்த மட்டில் மக்களின் சனத்தொகைக்கேற்ப வாகனங்களின் பயன்பாடும் மிகவும் கூடுதலாகவே காணப்படுகின்றன.
குறிப்பாக – துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கில்களச்சக்கர வண்டி,
கார், வேன் என்பவற்றை குறிப்பிடலாம்.
இவற்றின் உபயோகம் என்பது தினம், தினம் அதிகரித்த வண்ணமே உள்ளதனை அவதானிக்க முடிகின்றது,
வாகன அதிகரிப்பு ஒரு புறமிருக்க காத்தான்குடியில் இடம் பெற்று வரும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் 2016/ 2017 ஆண்டுகளில் பாரிய வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளும்
காத்தான்குடியில் தால் ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
காத்தான்குடியில் வீதி விபத்துகள் பல காரணங்களினால் ஏற்படுகின்ற போதும் அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.
1 ) வாகன ஓட்டுனர்களின் கவலையீனம்.
2 ) போக்கு வரத்து விதிமுறை மீறப்படுகின்றமை.
3 ) தலைக்கவசம் அணியாது செல்லல்.
4 ) பெற்றோர்/ பாதுகாவலர் தங்கள் பொறுப்பின் கீழ் உள்ள (சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத)
சிறு வயதினரிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கின்றமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
எனவே நாம் பொறுப்புடனும், பொறுமையுடனுமிருந்து
பயணிப்போம்.
நன்றி.
ஏ.எல்.டீன் பைரூஸ்
ஊடகவியலாளர்
காத்தான்குடி.