ஜெய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஞ்சலி!


நடிகர் ஜெய்க்கு, அஞ்சலி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மிழ் சினிமாவில் வளர்ந்தும் வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெய். விஜய் நடித்த பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து சென்னை 600028 ஓரளவு ஹிட் கொடுக்க, அடுத்து வந்த சுப்ரமணியபுரம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதே போன்று எங்கேயும் எப்போதும், ராஜா ராணி ஆகிய படங்களும் ஜெய்க்கு நல்ல பேர் கொடுத்த படங்களில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஜெய் நேற்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 
இதனை முன்னிட்டு நடிகை அஞ்சலி அவருக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹேப்பி ஃபர்த்டே ஜெ..இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உனது உலகத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும், அதற்காக நான் உன்னை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். எங்கேயும் எப்போதும் படத்தில் இருவரும் இணைந்து நடித்ததில் இருந்து இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. மேலும், இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது. திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பேச்சு அடிபட்டது.
ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்று அஞ்சலி கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். அப்போது, இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு காதல் முறிந்ததாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -